K U M U D A M   N E W S
Promotional Banner

Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 23-10-2024

Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 23-10-2024

பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி-ஜின் –பிங் பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தையை மட்டுமே எப்போதும் ஆதரிக்க வேண்டும் - போரை அல்ல. சர்வதேச பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் தேவை எனவும் பிரதமர் மோடி கருத்து.

"இதற்காக இந்தியா - சீனா உறவு முக்கியம்..” - சீன அதிபர் உடனான சந்திப்புக்கு பிறகு பிரதமர் போட்ட பதிவு

பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு இந்தியா-சீனா இடையேயான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று சீன அதிபர் ஜி-ஜின் பிங் சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

திருப்பத்தூரில் வெளுத்து வாங்கும் கனமழை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை. விண்ணமங்கலம், அய்யனூர், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

எண்ட்ரி கொடுத்த அதிகாரிகள்... CMDA அலுவலகத்திலும் சோதனை

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் ED சோதனை நடத்திவரும் நிலையில் சி.எம்.டி.ஏ அலுவலத்திலும் சோதனை.

இடைவிடாமல் கொட்டிய மழை... சாலைகளில் பெருக்கெடுக்கும் மழைநீர்

நாகர்கோவிலில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு

Bangalore Building Collapse Case: தரைமட்டமான 6 மாடி கட்டிடம் உயரும் பலி எண்ணிக்கை

பெங்களூருவில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து. ஒரு தொழிலாளியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்

வெறியாட்டம் ஆடிய மழை... வெள்ளக்காடாக காட்சியளிக்கும் மதுரை

மதுரையில் பெய்த கனமழை காரணமாக அங்கன்வாடி மையங்களுக்குள் மழைநீர் புகுந்தது. அங்கன்வாடி மையங்களுக்குள் மழைநீர் புகுந்ததால் தங்களது குழந்தைகளை பெற்றோர் அழைத்துச் சென்றனர்

Ramanathapuram Rain : சில்லென மாறிய ராமநாதபுரம் | Tamil Nadu Weather Update

ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை. பட்டினம்காத்தான், கேணிக்கரை, அரண்மனை, வெளிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை

"போரை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்" – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி

பயங்கரவாதம் மற்றும் அதற்கு நிதி வழங்குவதை தடுக்க ஒற்றுமையுடன் உலக நாடுகள் செயல்பட வேண்டும் என 16வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

பெங்களூரு கட்டிடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு.. உரிமையாளரை தட்டி தூக்கிய போலீஸ்

பெங்களூருவில் கட்டுமான கட்டிடட் இடிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்த நிலையில், கட்டிட உரிமையாளர் முனிராஜ் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

கவரப்பேட்டை ரயில் விபத்து – VPN மூலம் சதித்திட்டமா?

கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக செல்போன்களை காவல்துறை ஆய்வு செய்து வருகிறது. விபிஎன் பயன்படுத்தி செல்போனில் பேசி சதித்திட்டம் தீட்டினார்களா என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Dana Puyal Update : தீவிர புயலாக உருவெடுக்கும் ”டானா”பாதிப்பு யாருக்கு?

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் வட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

14 மாவட்டங்களுக்கு கனமழை.. எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, நெல்லை, குமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் சீட்டு கட்டு போல் சரிந்த கட்டிடம்.. கட்டிட உரிமையாளர் மகனை கைது செய்த போலீஸ்

தொடர் கனமழையால் பெங்களூருவில் கட்டுமானத்தில் இருந்த 6 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்நிலையில் கட்டிட உரிமையாளரின் மகன், காண்ட்ராக்டர் முனியப்பா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கவரைப்பேட்டை ரயில் விபத்து: செல்போன்கள் ஆய்வு.. தீவிர விசாரணையில் ரயில்வே காவல்துறை

கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் பதிவாகி உள்ள செல்போன்களை ஆய்வு செய்து வருகிறது ரயில்வே காவல்துறை.

இருக்கு..கனமழை இருக்கு.. - எச்சரிக்கும் வனிலை மையம்..எதிர்கொள்ள தயாரா இருங்க மக்களே!

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

சுப்மன் கில், ரிஷப் பண்ட் தயார்.. தோல்வியில் இருந்து மீளுமா இந்திய அணி?

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் களமிறங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அரசு எந்த உதவியும் செய்யல..” எம்எல்ஏ கோ.தளபதியை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம்

மதுரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வுக்கு சென்ற எம்எல்ஏ கோ.தளபதியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு எந்த உதவியையும் செய்யவில்லை என குற்றம்சாட்டினர்.

வைத்திலிங்கத்தின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை... குவியும் தொண்டர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள வைத்திலிங்கத்தின் வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது வீட்டின் முன் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.

’எல்லோரும் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்’.. சோதனையின் போது கூலாக சொன்ன வைத்திலிங்கம்

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தஞ்சையில் உள்ள தனது இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது, தொண்டர்களிடம் சாப்பிட்டு வரச் சொல்லி கூலாக சொன்னது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

சுற்றுலாப் பயணிகளே அங்க மட்டும் போகாதீங்க..! - வனத்துறை விதித்த அதிரடி தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆழியார் கவியருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அருவியில் குளிக்க 3வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது.

ரூ.1.47 கோடி பண மோசடி - காவலர் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை

கன்னியாகுமரி புதுக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்தபோது சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் ரூ.1.47 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடங்களில் சோதனை.. குவியும் தொண்டர்கள்

இபிஎஸ் ஆதரவாளர் இளங்கோவன், ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

TN Rains: கோவை, மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை... வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை, மதுரையில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வாகனங்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.