பரந்தூருக்கு பறக்கயிருக்கும் பனையூர் டீம்.. எஸ்.பி.ஆலோசனை
தவெக தலைவர் விஜய் வருகையை முன்னிட்டு போராட்டக்குழுவினருடன் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி ஆலோசனை.
தவெக தலைவர் விஜய் வருகையை முன்னிட்டு போராட்டக்குழுவினருடன் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி ஆலோசனை.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பரந்தூர் மக்களை சந்திக்க உள்ள நிலையில் போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
விஜய் இந்தியா கூட்டணியுடன் வருவது தான் அவருக்கும் நல்லது, அவரது கொள்கை கோட்பாடுகளுக்கும் நல்லது, எல்லோருக்கும் நல்லது என்பதைத்தான் ஒரு இந்திய பிரஜையாக எதார்த்தமாக நான் சொல்ல முடியும் என்று செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல்கலைகழக துணைவேந்தர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கு, ஆளுநர் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதற்கு எதிரான வழக்குகளில் தீர்வு எட்டவில்லை என்றால் நீதிமன்றம் தீர்வு காணும் என தெரிவித்து வழக்குகளை இறுதி விசாரணைக்காக உச்சநீதி மன்றம் ஒத்திவைத்தது.
"பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரத்தில் தீர்வு எட்டப்படவில்லை என்றால் நீதிமன்றம் தீர்வு காணும்"
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி- க்கு மாற்றக் கோரி சிறுமியின் தந்தை தாக்கல் செய்த மனு குறித்து தமிழக அரசு, சிபிஐ உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினருடன் விஜய் சந்திக்க உள்ள இடத்தில் என்.ஆனந்த் ஆய்வு.
தவெக தலைவர் விஜய், பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை நேரில் சந்திக்க உள்ளதால் பாதுகாப்பு வழங்க கோரி தவெக நிர்வாகிகள் டிஜிபியிடம் மனு அளித்துள்ளனர்.
"கூத்தாடி என்ற கூற்றை சுக்குநூறாக உடைத்து தமிழக அரசியலின் மையம் ஆனார் எம்.ஜிஆர்"
"கூத்தாடி என்ற கூற்றை சுக்குநூறாக உடைத்து தமிழக அரசியலின் மையம் ஆனார் எம்.ஜிஆர்"
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் சாரத்தைப் பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி காவி உடை தரித்த திருவள்ளுவர் உருவ படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பரந்தூர் பசுமை வெளி விமான நிலைய போராட்ட குழுவினரை சந்தித்து தவெக நிர்வாகிகள் ஆலோசனை.
பொங்கல் திருநாளையொட்டி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜய் ‘நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025-ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் அதிகம் பேசப்படுவது சமூக நீதி, ஆனாலும் தலித்துகளை ஏற்ற தாழ்வோடு பார்க்கிறார்கள் - ஆளுநர்
புதுச்சேரி அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.
உலகில் இந்தியாவை தவிர்த்து விட்டு உலக நாடுகள் எந்த முடிவையும் எடுக்க முடியாது. இந்தியா முழுவதும் விவேகானந்தரின் அருளும் ஆசீர்வாதமும் நிறைந்துள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
’மத கஜ ராஜா’படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க நடிகர் விஷால், இப்போது எந்த நடுக்கமும் இல்லை என்றும் சாகும் வரை ரசிகர்களின் அன்பை மறக்கமாட்டேன் என்றும் பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் வரும் 20-ஆம் தேதிக்குள் உட்கட்டமைப்பு நிர்வாகிகளை நியமனம் செய்வது தொடர்பான விரிவான பட்டியலை வழங்க வேண்டும் என்று மாவட்ட பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று வயது சிறுமி, பள்ளி கழிவு நீர் தொட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் கைதான மூவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சிலைகளை நிறுவ முடிவு.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு.
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெறுகிறது.
தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தவெக பொதுசெயலாளர் ஆனந்த் தலைமையில் கூட்டம்.