தனது ஐந்து மாத கர்ப்பிணி மனைவியை, கொலை செய்த கணவன், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன் ரெட்டி மற்றும் ஜோதி கடந்த 2024 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு போடுப்பாலில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஒரு மாதத்திற்கு மகிழ்ச்சியாக வாழ்ந்த பிறகு, குடும்பப் பிரச்சினைகளால் அடிக்கடி அவர்களுக்கு இடையே சண்டைகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த 2024 ஏப்ரலில், ஜோதி தனது கணவர் மீது குடும்ப வன்முறை புகார் அளித்துள்ளார். பின்னர், கிராமப் பெரியவர்கள் பேசி அவர்களை சமாதானப்படுத்தினர். மேலும், ஜோதி பஞ்சாகுட்டாவில் உள்ள ஒரு கால் சென்டரில் மூன்று மாதங்கள் வேலை செய்துள்ளார். ஆனால், அவரது நடமாட்டத்தில் சந்தேகம் ஏற்பட்டதால், மகேந்திரன் ரெட்டி அவரை வேலையைத் தொடர அனுமதிக்கவில்லை.
இதற்கிடையில் கடந்த மார்ச் மாதத்தில் ஜோதி கருவுற்றுள்ளார். கர்ப்பம் அடைந்த பிறகும், அவர்களுக்கு இடையே சண்டைகள் தொடர்ந்தன. இந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி அன்று, மருத்துவப் பரிசோதனைக்காக தான் விகாராபாத்திற்குச் செல்வதாகவும், பின்னர் பெற்றோருடன் தங்குவதாகவும் ஜோதி கணவனிடம் கூறியுள்ளார். இதற்கு கணவன் மகேந்திரன் மறுக்க, இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஜோதி மீது ஆத்திரமடைந்த மகேந்திரன், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, தடையங்களை மறைக்க ஒரு பிளேடால் ஜோதியின் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். தலை, கைகள், மற்றும் கால்களை மூசி ஆற்றில் வீசிவிட்டு, மற்ற உடல் பாகங்களை வீட்டிலேயே வைத்துள்ளார். இந்த உடல் பாகங்களை மூன்று முறை ஆற்றுக்குச் சென்று வீசியதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, மகேந்திரன் தனது மனைவி காணாமல் போய்விட்டதாக அவரது சகோதரிக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவர், மகேந்திரனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு போலீசார் விசாரித்தபோது, அவர் தனது மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
போலீசார், அவர் கூறிய தகவலின் அடிப்படையில் வீட்டில் இருந்த உடல் பாகங்களை மீட்டனர். ஆற்றில் வீசப்பட்ட மற்ற உடல் பாகங்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் நீச்சல் வீரர்கள் உதவியுடன் தேடி வருகின்றனர். இச்சம்பவம், தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.