தெலங்கானாவில் உள்ள கல்லூரிகளில் கூரியர் மூலம் போதைப்பொருள் விநியோகம் செய்யும் பெரிய கும்பலை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவான ஈகிள் (EAGLE) போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். இதன் மூலம் கல்வி வளாகங்களில் உள்ள போதைப்பொருள் விற்பனை கும்பல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கல்லூரிகளில் போதைப்பொருள் கும்பல்
ஈகிள் போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கை தொடங்கப்பட்டது. அப்போது, டெல்லி மற்றும் கர்நாடகாவில் இருந்து ஐதராபாத்துக்கு போதைப்பொருள் பார்சல்கள் அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டது.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், இரண்டு தனியார் கல்லூரி மாணவர்களான பாஸ்கர் மற்றும் தினேஷ் ஆகியோர் டெல்லியில் இருந்து போதைப்பொருள் விற்கும் "நிக்" என்ற நைஜீரியருடன் ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு, போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கூரியரில் அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்
போதைப்பொருள் கும்பல், தங்கள் பொருட்களை மறைத்து, ஸ்ரீ மாருதி கூரியர்ஸ், டி.டி.டி.சி. மற்றும் இந்திய அஞ்சல் துறை போன்ற கூரியர் சேவைகள் மூலம் கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ஜிப்லாக் கவர்கள் என பல்வேறு பொருட்களுக்குள் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
கொள்லை லாபம்
போதைப்பொருள் வியாபாரிகள், ஓ.ஜி. வீட் போதைப்பொருளை டெல்லியில் ஒரு அவுன்ஸ் ரூ.30,000-க்கு வாங்கி, அதை ஐதராபாத்தில் ஒரு கிராம் ரூ.2,500-க்கு விற்றுள்ளனர். இதன் மூலம் 700% லாபம் பெற்றுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்று, கஞ்சா மற்றும் எம்.டி.எம்.ஏ. போன்ற போதை மாத்திரைகளும் டெல்லியில் உள்ள நைஜீரியர்களிடம் இருந்து வாங்கப்பட்டு, கூரியர் வழியாக ஐதராபாத் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கட்டாய போதைப்பொருள் சோதனை
சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈகிள் (EAGLE) போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும், இந்தச் சிக்கலைத் தடுக்க அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் கட்டாய திடீர் போதைப்பொருள் சோதனைகளை நடத்த ஈகிள் (EAGLE) பரிந்துரைத்துள்ளது. அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் விடுதிகளில் மாணவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயப் போதைப்பொருள் சோதனை நடத்த வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படுவதுடன், அவற்றின் உரிமமும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.