குஜராத் மாநிலம் புஜ் விமானப்படைத் தளத்துக்கு சென்ற அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தினரை சந்தித்துப் பேசினார். அப்போது அவர்களுடன் உரையாடியதோடு வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகத்துடன் கோஷங்களை எழுப்பினார். அவருடன் இந்திய விமானப்படைத் தலைவர் Air chief marshall அமர் ப்ரீத் சிங் உடனிருந்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது 2 புள்ளி 1 பில்லியன் டாலர் நிதியுதவியை பாகிஸ்தானுக்கு IMF அறிவித்ததாகக் கூறினார். அந்த நேரத்தில் வடஇந்தியாவில் மக்கள், ராணுவத்தினர் மீது ட்ரோன், ஏவுகணைத் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய போர் நிறுத்தம் பாகிஸ்தானுக்கு ஒரு சோதனைக் காலம் போன்றது. பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாதிகளுக்கு உறுதுணையாகவும், மோசமான நடத்தைக்குத் திரும்பினால், இந்தியா மீண்டும் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று கூறினார்.
பாகிஸ்தானுக்கு IMF வழங்கும் நிதி என்பது பயங்கரவாதத்துக்கு அளிக்கும் நிதி எனவும் பாகிஸ்தானின் நீண்ட காலமாக பயங்கரவாதிகளுக்கான புகலிடமாக உள்ளதாகவும் அவர் கூறினார். அழிக்கப்பட்ட பயங்கரவாத உள்கட்டமைப்பை மீண்டும் உருவாக்க பாகிஸ்தான் முயற்சிக்கத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கிய 1 பில்லியன் டாலர் உதவியை IMF மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்தியா விரும்புவதாக கூறினார்.
IMF-க்கு நாம் வழங்கும் நிதி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்பை உருவாக்கப் பயன்படுத்தப்படுவதை இந்தியா விரும்பவில்லை" என தெரிவித்தார்.
அப்போது அவர், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. இது வெறும் டிரெய்லர்தான், முழு திரைப்படமும் இந்தியா பதிலடியாக கொடுக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.