இந்திய ராணுவம் தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று முன் தினம் நள்ளிரவு 1 மணி அளவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 70க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உள்பட பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து நேற்று இரவு இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரத்தை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.இதை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்திய ராணுவம் சாதுரியமாக கையாண்டு ஏவுகணை தாக்குதலை முறியடித்தது. இருப்பினும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய ராணுவ பாகிஸ்தானின் லாகூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் பல்வேறு சேதங்களை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பயங்கரவாதிகள் உடலுக்கு ராணுவ மரியாதை
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், பஹல்காம் தாக்குதல் தான் இந்த பிரச்னைகளுக்கான துவக்கப்புள்ளியாக அமைந்துள்ளது. பயங்கரவாதிகளை குறிவைத்துத்தான் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு ராணுவ மரியாதை அளித்து இறுதிச் சடங்கு நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவால் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் தான். மேலும் பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற புகைப்படங்களை அவர் காட்டினார்.இதன்மூலம், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை, ஆதரவு கொடுக்கவில்லை என பாகிஸ்தான் கூறியது பொய் என்பது நிரூபணமாகி உள்ளது.
மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை
மேலும் இந்தியாவின் அணைகள் போன்ற கட்டமைப்புகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாதி மசூத் அசார் உள்ளிட்ட ஏராளமானோருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்துள்ளது. இந்தியாவின் நோக்கம் பயங்கரவாதிகளை தாக்குவது மட்டுமே, மக்களை அல்ல. பாகிஸ்தானின் எந்த வழிபாட்டுத் தலங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தவில்லை” என தெரிவித்தார்.