இந்தியா

மக்களின் நலனை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளது - விங் கமாண்டர் வியோமிகா சிங்

மக்களின் நலனை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும், இந்திய ஆயுதப்படையுடன் கடற்படையும் சேர்ந்து ஆப்ரேஷன் சிந்தூரில் ஈடுபட்டுள்ளதாவும், விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.

மக்களின் நலனை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளது - விங் கமாண்டர் வியோமிகா சிங்
விங் கமாண்டர் வியோமிகா சிங்
ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பவல்பூர், முரிட்கே, சியால்கோட், சகாம்ரு, குல்பூர், பிம்பர், கோட்லி மற்றும் முசாபராபாத் என 9 இடங்களில் இந்த தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது எந்த ஒரு தாக்குதல்களையும் நடத்தாமல், பயங்கராவத முகாம்களை மட்டுமே குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தியது.

மிக நுட்பமாக திட்டமிடப்பட்டு, பயங்கரவாத முகாம்களை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பகவல்பூரில் ஜெய்ஷ் இ - முகமது இயக்கத்தின் தலைமையகம் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது.

முசாபர்பாத்தில் லஷ்கர் - இ - தொய்பாவின் மையமாக செயல்பட்டு வந்த செய்த்னா பிலால் மஸ்ஜித் மீது ராணுவம் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், கோட்லி மையத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பினர் தங்கியிருந்ததாக தகவல் கிடைத்தது.

பொதுமக்களுக்கோ, அவர்கள் சொத்துக்களுக்கோ சேதம் ஏற்படாத வகையில் கடும் கட்டுபாடுகள் பின்பற்றப்பட்டது. உளவுத்துறையின் தகவல்களும், கடற்படையின் கூர்மையான கண்காணிப்பும் ஆபரேஷன் சிந்தூரில் முக்கிய பங்கு வகித்தது. முப்படைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப திறன் காரணமாக ஆபரேஷன் சிந்தூர் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளோம். நாட்டின் பாதுகாப்பிற்கும், மக்களின் நலனை பேனுவதிலும் இந்தியா உறுதியாக உள்ளது. தேசிய பாதுகாப்புக்கும், நீதிக்கும் ஆயுதப்படைகள் முழு உறுதிபாட்டுடன் செயல்படுவதாக தெரிவித்தார்.