இந்தியா

India Pakistan War : இந்தியா, பாகிஸ்தான் போரில் நாங்கள் தலையிட முடியாது - அமெரிக்க துணை அதிபர்

India Pakistan War Update : இந்தியாவில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வரும் சூழலில், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான தற்போதைய சூழலில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார்.

India Pakistan War : இந்தியா, பாகிஸ்தான் போரில் நாங்கள் தலையிட முடியாது - அமெரிக்க துணை அதிபர்
அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ்
India Pakistan War Update : கடந்த மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டியில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய இராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லைப்பகுதியில் ஏவுகனை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 70-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவம் போர் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், இந்திய எல்லை பகுதியில் ட்ரோன், பீரங்கி, போர் விமானங்கள் கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவின் முப்படைகளும் தாக்குதலில் இறங்கியுள்ளது.

இந்தியாவின் எல்லை பகுதிகளில் லடாக், காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இந்திய விமானப் படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு முதல் திடீரென ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானின் டிரோன் தாக்குதலை முறியடித்த இந்திய ராணுவம்இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட நகரங்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன்கள் மூலம் விடிய விடிய தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தானின் ட்ரோன், பீரங்கி மூலமாக இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் தாக்குதல் நடத்திய நிலையில், அதிரடியாக செயல்பட்ட இந்திய விமானப்படை நடுவானில் சுட்டு வீழ்த்திய நிலையில், பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், எல்லையில், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் உச்ச கட்ட பாதுகாப்பு உஷார் நிலையில் உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் இந்திய படைகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா-பாகிஸ்தான் தாக்குதல் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் கூறியுள்ளதாவது, இருநாடுகளுக்கும் இடையில் நடக்கும் இந்த தாக்குதல் குறித்து, இந்தியாவையோ மற்றும் பாகிஸ்தானையோ ஆயுதங்களை கீழே போடுங்கள் என நாங்கள் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். ஆனால், இந்தியா, பாகிஸ்தான் போர், அணு ஆயுதப் போராக மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம் என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தில், அமெரிக்காவின் நேரடி தலையீடு இருக்காது. இது அதற்குரிய விஷயம் அல்ல என்றும் கூறினார். இந்தியா, பாகிஸ்தான் இடையிலான தற்போதைய சூழலில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று கூறிய அவர், தொடர்ந்து நாங்கள் எங்களால் முடிந்தளவிற்கு இருநாடுகளுக்கு இடையில் அமைதியை நிலைநாட்டவே விரும்புவதாகக் கூறினார்.







அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ ஆகியோரும் இதே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்தார்.