'வாக்குத் திருட்டு' நடப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குத் தேர்தல் ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'வாக்குத் திருட்டு' என்ற முறையற்ற சொற்களைப் பயன்படுத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாகும் என்று கூறியுள்ளது.
வாக்கு திருட்டு சாத்தியமற்றது
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், "தேர்தல் ஆணையத்தை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், நாங்கள் வாக்காளர்களின் பக்கம் உறுதியாக நிற்போம்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எந்தப் பாரபட்சமும் பார்க்காமல் அனைத்துக் கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சமமாகவே நடத்துவதாகத் தெரிவித்தார். லட்சக்கணக்கான ஊழியர்கள், முகவர்கள் எனப் பல கோடி பேர் முன்னிலையில் வாக்குப்பதிவு நடப்பதால், இவ்வளவு வெளிப்படையாக நடக்கும் ஒரு செயலில் வாக்குத் திருட்டு என்பது சாத்தியமற்றது.
ஆதாரம் கேட்டோம்.. பதிலில்லை
7 கோடிக்கும் மேலான பீகார் வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்துடன் நிற்கின்றனர். பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறோம்.
சிலர் பொய்களையும், மக்களிடையே அச்சத்தையும் விதைக்க முயற்சிக்கின்றனர். எங்களுடைய நேர்மையை யாரும் கேள்வி எழுப்ப முடியாது. வாக்குத் திருட்டு உள்ளிட்ட புகார்களை கண்டு தேர்தல் ஆணையம் அஞ்சாது. சில வாக்காளர்கள் இருமுறை வாக்களித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் அதற்கு ஆதாரம் கேட்கும்போது பதில் இல்லை.
உண்மைக்கு புறம்பான செய்திகள்
அரசியல் கட்சிகளின் கோரிக்கையின் பேரில்தான் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெறுகிறது. அதில் தவறு இருந்தால், அதை நேரடியாக எங்களிடம் தெரிவிக்கலாம். அதைச் செய்யாமல், உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவது தவறு” என்று அவர் தெரிவித்தார்.