K U M U D A M   N E W S

Author : Vasuki

சென்னையில் 80 ஹோட்டல்கள் மீது பாயும் நடவடிக்கை

80 உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு மாநகராட்சி பரிந்துரை

இதை எதிர்பார்க்கல.. வேஷ்டி குல்லாவுடன் TVK தலைவர் Vijay வருகை

சென்னையில் தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நோன்பு திறக்கும். நிகழ்வில் பங்கேற்க விஜய் வருகை

விஜயபாஸ்கருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது

திருத்தணி கோர விபத்து.. பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரசுப்பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில், பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் இன்று முதல் ஊதியம், நாளை முதல் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்ற உறுதியை ஏற்று வாபஸ்

சீமான் வீட்டின் பாதுகாவலர் ஜாமின் கோரி மனு

துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டின் பாதுகாவலர் மற்றும் பணியாளர் ஜாமின் கோரி மனு

TVK Iftar Event: இப்தார் விருந்து.. சற்று நேரத்தில் வரும் Vijay.. ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தவெக சார்பில் இஃப்தார் விருந்து ஏற்பாடு

"மருத்துவ பாடத்திட்டம் தமிழில் வேண்டும்" - அமித்ஷா வலியுறுத்தல்..!

மருத்துவம், பொறியியல் பாடத்திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழில் அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தினார்.

பார்க்கிங் வசதி இல்லாத உணவகங்களுக்கு ஆபத்து..!

சென்னையில் உரிய பார்க்கிங் வசதி இல்லாத 80 உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை போக்குவரத்துக் காவல் துறை சென்னை மாநகராட்சிக்கு பரிந்துரை செய்துள்ளது.

Sunil Chhetri: மீண்டும் களத்திற்கு திரும்பிய சுனில் சேத்ரி.. மகிழ்ச்சியில் கால்பந்து ரசிகர்கள்..!

Sunil Chhetri Return India Team: இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மீண்டும் சுனில் சேத்ரி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

IND vs NZ: 25 ஆண்டுகால பகையை தீர்க்குமா இந்தியா.. இறுதிப்போட்டியில் யாருக்கு வெற்றி..?

2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது போலவே இந்த சாம்பியன் டிராபி போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. சாம்பியன் டிராபி தொடரில், 25 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா நேருக்கு நேர் மோதுகின்றனர்.

காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் - அமைச்சர் தகவல்

மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரத்தில் அண்ணாவின் பெயரால் 8 மாதங்களில் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பாலிவுட் சினிமாவை விட்டு வெளியேறுகிறேன் - அனுராக் காஷ்யப்

பாலிவுட் சினிமாவில் எதார்த்தம் இல்லை என்று கூறியுள்ள அனுராக் காஷ்யப், இனி பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும்,  விரைவில் மும்பையை காலி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கிச் செல்வார்கள் - சென்னை உயர்நீதிமன்றம்

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் சாதியை தூக்கிப் பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள். நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கிச் செல்வார்கள். படிப்படியாகவே மாற்றத்தை கொண்டு வர முடியும். அதற்கான நேரம் இது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் அப்டேட்டாக இல்லை - தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம்

முதலமைச்சர் அவுட் டேட்டடாக இருக்கிறார் அப்டேட்டாக இல்லை என்று மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

ஜெகத்ரட்சகன் அலுவலகத்தில் ED ரெய்டு

சென்னை தியாகராயநகரில் உள்ள ஜெகத்ரட்சகனின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

தமிழ்நாடு அரசை பாராட்டிய உயர்நீதிமன்றம்

புழல் மத்திய சிறை சிறப்பான பராமரிக்கப்படுவதாகவும், உணவு உள்ளிட்ட வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

பாஜகவினரை கண்டித்து திமுகவினர் போராட்டம்

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கையெழுத்து இயக்கம் -திமுகவினர் எதிர்ப்பு

சிதம்பரம் முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள்.. பொதுமக்கள் போராட்டம் |

சிதம்பரம் முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் ஓமக்குளம் பகுதியில் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்

அரசியல் கட்சிகள் செயலுக்கு நீதிபதிகள் அட்வைஸ்

தனி நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில் எவ்வித தவறும் இல்லை - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

நிலுவை ஊதியம் கோரி 200க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் 100 நாள் வேலைக்கு ஊதியம் வழங்கவில்லை என புகார்

வனத்துறை காவலரிடம் 6.80 கோடி மோசடி... சைபர் கிரைம் போலீசார் விசாரணை..!

தமிழ்நாடு வனத்துறையில் ஓய்வு பெற்ற முதன்மை தலைமை வனத்துறை பாதுகாவலரிடம், சுமார் ரூ.6.8 கோடி சைபர் க்ரைம் மோசடி நடந்துள்ளது. ஓய்வு பெற்ற பின் கிடைத்த பணம் அனைத்தையும் ஆன்லைன் டிரேடிங் செயலி மூலம் முதலீட்டில் இழந்த சம்பவம் தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

புழல் மத்திய சிறையில் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது - தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு

புழல் மத்திய சிறை சிறப்பான பராமரிக்கப்படுவதாகவும், உணவு உள்ளிட்ட வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. 

தோனியை விட விராட் கோலி சிறந்தவர் - கபில்தேவ் பாராட்டு

தோனியை விட விராட் கோலி சிறந்தவர் என்றும், குறிப்பாக அழுத்தமான சேசிங் செய்யும் ஒருநாள் போட்டிகளில் தோனி உட்பட உலகின் மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களையும் விட விராட் கோலி சிறந்தவர் என்று அவர் இந்திய அணியில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பாராட்டியுள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சதி.. எலான் மஸ்க் குற்றச்சாட்டு

விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்துவருவதற்கான பணியை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேற்கொண்டிந்த நிலையில், அதனை அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் தடுத்ததாக எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.