K U M U D A M   N E W S

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் | Kanchipuram Temple Kumbabishekam |Kumudam News

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் | Kanchipuram Temple Kumbabishekam |Kumudam News

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் | Kanchipuram Temple Kumbabishekam |Kumudam News

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் | Kanchipuram Temple Kumbabishekam |Kumudam News

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இன்று (அக். 3) சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது இன்று இரவுக்குள் ஒடிசா - ஆந்திரா கடலோரப் பகுதியில் புயலாகக் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வடசென்னைப் பிரபல ரவுடி நாகேந்திரன் உடல்நிலை மோசம்: ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

வடசென்னையின் பிரபல தாதாவும், ஆயுள் தண்டனைக் கைதியுமான நாகேந்திரன் (ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு A1) கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் தற்போதுச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சிறைக் கைதிகள் வார்டில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

விஜய்க்கு எதிராகப் போஸ்டர் ஒட்டிய இளைஞர் தற்கொலை: த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

கரூர் கூட்ட நெரிசலைக் கண்டித்து போஸ்டர் ஒட்டிய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரத்வாஜ் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். தன்னை மிரட்டிய திவாகர் உள்ளிட்ட 4 தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூரில் பாதுகாப்புக் குறைபாடு இருந்ததா? விஜய்-யின் 'ஒய் பிரிவு' அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விசாரணை!

கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய்-க்கு வழங்கப்பட்ட 'ஒய் பிரிவு' பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்பில் குறைபாடு இருந்ததா மற்றும் கமாண்டோக்களின் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இடுக்கியில் சோகம்.. ஹோட்டல் கழிவுத்தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 3 தமிழக தொழிலாளர்கள் பலி!

கேரள மாநிலம் இடுக்கியில் ஒரு ஹோட்டலின் கழிவுத் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் புல்டோசர் மூலம் தொட்டியை இடித்து உடல்களை மீட்டனர்.

இந்தியாவின் மிகப் பணக்காரப் பெண்மணி... ஹுருன் தரவரிசையில் ரோஷ்னி நாடார் 3-வது இடம் பெற்று சாதனை!

HCL டெக்னாலஜிஸ் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, ரூ.2.84 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஹுருன் இந்தியாவின் பணக்காரப் பெண்மணி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஒட்டுமொத்தப் பட்டியலில் முதல் முறையாக டாப்-3-க்குள் ஒரு பெண் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

திருவண்ணாமலை கொடுமை: ஆந்திரப் பெண் பலாத்கார வழக்கில் 6 மாதங்களில் உச்சபட்ச தண்டனை- மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதி!

திருவண்ணாமலையில் 18 வயது ஆந்திரப் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 2 காவலர்களுக்கு 6 மாதங்களுக்குள் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதியளித்துள்ளார்.

கரூர் துயர சம்பவம்: தவெக தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

கரூரில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு வார மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தவெக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.