K U M U D A M   N E W S

சென்னை

இந்தி திணிப்பு மீண்டும் ஒரு மொழிப்போருக்கு வழிவகுக்கும்.. மாநில கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம்

மும்மொழிக் கொள்கையை எதிர்த்து சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறகணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மோசமடைந்த நாகேந்திரன் உடல்நிலை.. தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கு அனுமதி

நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க அனுமதியளித்த நீதிமன்றம் அவரின் உடல் நிலை குறித்து வேலூர் மாவட்ட நீதிபதி, மருத்துவமனைக்கு  நேரில் சென்று விசாரணை செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.

ஒரே நாளில் வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.64,280 விற்பனை

ஜிஎஸ்டி கட்டாமல் மோசடி.. தனியார் நிறுவன இயக்குநரை கைது செய்த போலீஸ்

பணிக்கு ஆட்களை அனுப்பியதற்காக பணத்தை பெற்று கொண்டு 16.32  லட்சம்  ரூபாய் ஜிஎஸ்டி கட்டாமல் மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன இயக்குநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் அமீர்கானின் தாயாருக்கு உடல்நலக் குறைவு.. மருத்துவமனையில் அனுமதி

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் தாயார் ஜீனத் தாஹிர் ஹுசைன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தவறான சிகிச்சையால் உயிரிழந்த சிறுவன்..? திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்

சென்னையில் தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்ததாக கூறி சிறுவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

நடுங்க வைத்த பழவந்தாங்கல் ரயில் நிலைய சம்பவம்.. தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் மர்ம நபர், பெண் காவலரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் மற்றும் கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் சுற்றிய சம்பவத்தின் எதிரொலியாக ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அதிகரிக்கும் **லியல் வன்கொடுமை.... சென்னையில் வெடித்த போராட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக மாணவரணி சார்பாக கண்டன ஆர்பாட்டம்.

GOLF மைதானத்தில் நீர்நிலை அமைப்பதற்கான பணிகள் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

"சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள கோஃல்ப் மைதானத்தில் நீர்நிலை அமைப்பதற்கான பணிகளுக்கு தடை விதிக்க முடியாது"

ரோலர் ஸ்கேட்டிங் பேஸ்கெட் பால் போட்டி.. தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

இலங்கையில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் பேஸ்கெட் பால் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணியில் இடம்பெற்றிருந்த செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. 

ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைக்கும் பணி.. தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள  கோல்ஃப் மைதானத்தில், நீர்நிலை அமைப்பதற்கான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சம் தொட்ட தங்கம் விலை.., இன்று எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.63,760க்கு விற்பனை.

சென்னையில் மெத்தபெட்டமைன் விற்பனை – கைது செய்யப்பட்ட 3 பேர்

சென்னை, நுங்கம்பாக்கத்தில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது

லுாப் சாலையில் தடையில்லாத போக்குவரத்து - காவல் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரினா கடற்கரையில் உள்ள லுாப் சாலையில் தடையில்லாத போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் தமிழக அரசின் உடனடி நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு

என்னுடைய வருமானத்தில் கட்டியது.. அகரம் பவுண்டேஷன் நிகழ்ச்சியில் சூர்யா நெகிழ்ச்சி..!

சென்னை, தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா நேற்று (பிப்ரவரி 16 ) அன்று நடைபெற்றது. நிகழ்வில் திரைக் கலைஞர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டனர். சூர்யா - கார்த்தி தாயார் லட்சுமி அவர்கள் கட்டிடத்தை திறந்து வைத்தார். 

ஜகபர் அலி வழக்கு – காவல்துறைக்கு பறந்த நோட்டீஸ்

அதிமுக நிர்வாகி ஜகபர் அலி கொலை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - காவல்துறைக்கு சிபிசிஐடி நோட்டீஸ்.

போராட்டம் நடத்திய மாணவர்கள் – கைது செய்த போலீசார்

யுஜிசி திருத்த விதிகளை திரும்பப்பெறக்கோரி சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முற்றுகை.

வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க அனுமதி - மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி

கோடை கால மின்தேவையை சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க அனுமதி.

பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல்: வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கும் முதல்வர்- அண்ணாமலை விமர்சனம்

சென்னை பழவந்தாங்கலில் பெண் காவலருக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடப்பதாக குற்றம்சாட்டினார். 

Vyasarpadi Murder Case : பூட்டிய வீட்டில் சடலம் 8000 ரூபாய் பஞ்சாயத்து கொலையில் முடிந்த விபரீதம்!

Vyasarpadi Murder Case : பந்தல் போட்ட பணம் 8 ஆயிரம் ரூபாய் கொடுக்காததால், இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்... பட்டா கத்தியால் வெட்டி வெறிச்செயல்

சென்னை அம்பத்தூரில் ஓட்டல் ஊழியரை பட்டாக் கத்தியால் வெட்டிய கும்பல்

கோவில் நிலத்தில் வணிக வளாகம் டெண்டர் அறிவிப்பு திரும்ப பெறப்படும் - இந்து சமய அறநிலையத்துறை

திருவள்ளுர் பூங்காவனத்தம்மன் கோவில் நிலத்தில், வணிக வளாகம் கட்டுவதற்கு வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பு உடனடியாக திரும்ப பெறப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை, சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.

சாதி வளர்ச்சிக்கு எதிரானது - உயர்நீதிமன்றம்

சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை தூண்டும் சாதி, வளர்ச்சிக்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாசவேலைக்கு சதித்திட்டம்? சென்னையில் பிடிபட்ட அசாம் தீவிரவாதி

அபுசலாம் அலி சென்னையில் வேறு யாருடனாவது தொடர்பில் இருந்தாரா என தமிழக கியூ பிரிவு போலீசார் விசாரணை