K U M U D A M   N E W S

இந்தியா

மணிப்பூருக்கு முதல்முறையாகப் பிரதமர் மோடி பயணம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இன வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு, பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாகப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பயணம்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு: ராம்பன் மாவட்டத்தில் நிலச்சரிவு!

வட இந்தியாவில் நிலவி வரும் வானிலை மாற்றம் காரணமாக, ஜம்மு காஷ்மீரின் ராம்பன் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகக் கனமழை பெய்துள்ளது. இதன் விளைவாக, ராம்பன் பகுதியில் உள்ள மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனைவியின் தங்கை மீது காதல்.. திருமணம் செய்து வைக்க கோரி இளைஞர் நூதன போராட்டம்!

உத்தரப்பிரதேசத்தில் தனது மனைவியின் சகோதரியை திருமணம் செய்துவைக்க கோரி, இளைஞர் ஒருவர் மின்சார கோபுரத்தில் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரின் உறவினர் வீட்டில் மர்ம மரணம்.. பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதி!

கேரள வனத்துறை அமைச்சரின் உறவினரான ஸ்ரீலேகா - பிரேமராஜன் என்ற முதிய தம்பதியினர், தங்கள் வீட்டிற்குள் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் குண்டு வெடிப்பு.. உடல் சிதறி ஒருவர் பலி!

கேரள மாநிலம், கண்ணூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டிறைச்சிக்கு 'NO' சொன்ன மேனேஜர்.. ஊழியர்கள் நூதன போராட்டம்!

கொச்சியில் உள்ள கனரா வங்கியில் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அடுத்த நாளே அலுவலகத்தில் 'பீஃப் திருவிழா'வை ஏற்பாடு செய்து ஊழியர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

வேறு சமூக இளைஞருடன் காதல்.. கொடூர செயலில் ஈடுபட்ட தந்தை!

வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்த மகளை தந்தை கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகமாடிய சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை ரோபோ உற்பத்தி மையமாக மாற்றத் திட்டம்.. ரிலையன்ஸ் இண்டலிஜென்ஸ்.. முகேஷ் அம்பானி அறிவிப்பு!

இந்தியாவை ஹியூமனாய்டு ரோபோ உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கத்தில், ரிலையன்ஸ் அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டலிஜென்ஸ் என்ற நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார்.

கேக் வெட்டிய 5 நிமிடத்தில் சோகம்.. கட்டடம் இடிந்து குழந்தை உயிரிழப்பு!

மும்பையில் பிறந்தநாள் கொண்டாடிய அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஒரு வயது குழந்தையும் அவரது தாயும் கட்டடம் இடிந்த விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வரதட்சணை கொடுமை: ஆசிட் குடிக்க வைத்து இளம்பெண் கொலை!

உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண் ஒருவரை அவரது கணவர் ஆசிட் குடிக்க வைத்து கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15வது உச்சி மாநாடு.. பிரதமர் மோடி ஜப்பான் பயணம்!

பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ளார்.

பிரதமர் மோடியின் ஜப்பான், சீனா பயணம்: இரு நாடுகளுடனான உறவில் புதிய அத்தியாயம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறைப் பயணமாக ஜப்பான் மற்றும் சீனாவுக்கு இன்று (ஆகஸ்ட் 28) இரவு தனி விமானம் மூலம் புறப்படுகிறார்.

சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் 50 கிமீ நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல்: ரூ. 50 கோடி மதிப்பிலான ஆப்பிள்கள் அழுகும் அபாயம்!

சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து காணப்படுவதால், பயங்கரப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்.. பீகார் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு!

பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் பீகாருக்குள் நுழைந்து இருப்பதாக கூறி, அவர்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களை உளவுத்துறை வெளியிட்டுள்ளது.

கூகுள் மேப் காட்டிய தவறான பாதை.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

கூகுள் மேப் வழிகாட்டுதலின்படி, மூடப்பட்டிருந்த தரைப்பாலத்தில் சென்ற வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

ரயிலில் கண்டெடுக்கப்பட்ட சிறுவன் உடல்.. அத்தை மகனை கொலை செய்த இளைஞர்!

மூன்று வயது சிறுவனை கொலை செய்து, ரயிலின் கழிவறையில் உடலை வீசிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளாவில் மூளை உண்ணும் அமீபா பாதிப்பு அதிகரிப்பு.. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

கேரளாவில் மூளை உண்ணும் அமீபா அதிகரித்து வரும் நிலையில், நடப்பாண்டில் மட்டும் 41 பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கூரியர் மூலம் போதைப்பொருள் விநியோகம்.. கல்லூரி மாணவர்களை குறிவைத்த கும்பல் கைது!

தெலுங்கானாவில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கூரியர் மூலம் போதைப்பொருள் விநியோகம் செய்யும் பெரிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

குட்கா தகராறில் கொடூரம்.. விஷம் குடித்து மனைவியும் 2 குழந்தைகளும் பலி!

உத்தரப் பிரதேசத்தில் குட்கா வாங்க கணவன் பணம் தராததால், விஷம் கொடுத்து தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் பயங்கரம்.. காதலியின் வாயில் வெடிபொருளை வைத்து கொடூர கொலை!

மைசூரில் திருமணமான பெண் ஒருவர் தனது காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

onam festival: என்ட ஸ்டேட் கேரள.. மோனாலிசாவிற்கு கசவு சேலையினை உடுத்திய சேட்டன்ஸ்!

ஓணம் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், புகழ்பெற்ற ஓவியமான மோனாலிசாவிற்கு தங்களது பாரம்பரிய கேரள கசவு சேலையினை உடுத்தியது போல் புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளியுள்ளது கேரள மாநில சுற்றுலாத்துறை.

விண்வெளிக்கு போன முதல் நபர் ஹனுமான்.. பாஜக எம்பி-யின் சர்ச்சை பேச்சு: கனிமொழி கண்டனம்

பள்ளி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், விண்வெளிக்கு பயணித்த முதல் நபர் ஹனுமான் என தெரிவித்துள்ள கருத்துக்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கானாவில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்.. கணவன் வெறிச்செயல்!

கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவன், உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணை கொடுமை.. மனைவியை உயிருடன் எரித்து கொன்ற கணவன்!

நொய்டாவில் இளம்பெண்ணை அவரது கணவர் குடும்பத்தினர் தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகத்தில் 17 தையல்கள்.. கல்லூரி மாணவியை கடித்து குதறிய தெருநாய்கள்!

உத்தரப்பிரதேசதில் 21 வயது மாணவியை தெரு நாய்கள் விரட்டி முகத்தை கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.