K U M U D A M   N E W S
Promotional Banner

இந்தியா

இன்ஸ்டாகிராமில் குறைந்த ஃபாலோவர்ஸ்.. கணவன் மீது போலீசில் புகார் அளித்த மனைவி

உத்தரப்பிரதேசத்தில் தனது கணவன் வீட்டு வேலை செய்ய வற்புறுத்தியதாகவும், அதனால் இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை குறைந்ததாகவும் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விண்வெளிக்கு செல்ல 3-வது முறையாக ஆயத்தமாகும் சுபான்ஷூ சுக்லா.. இஸ்ரோ அறிவிப்பு!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் ஜூன் 19 ஆம் தேதி விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2 முறை இவர்களின் விண்வெளி பயணம் முன்னெடுக்கப்பட்டு தொழில்நுட்பம், வானிலை காரணங்களால் Axiom-4 திட்டம் 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், Axiom-4 மிஷன் மீண்டும் 3 முறையாக தொடங்கப்படுகிறது.

கர்நாடகாவில் Bike Taxi -க்கு தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கர்நாடக மாநிலத்தில் வரும் ஜூன் 16 முதல் அனைத்து வகையான பைக் டாக்ஸி சேவைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஓலா (Ola), உபர் (Uber), ரேபிடோ (Rapido) போன்ற நிறுவன்களின் சேவைகள் உள்ளிட்ட அனைத்து பைக் டாக்ஸிகளின் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்படுகின்றன.

மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க மாட்டேன்- டேவிட் வார்னர் காட்டம்

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள டேவிட் வார்னர், “ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தில் மீண்டும் பயணிக்க மாட்டேன்” என குறிப்பிட்டுள்ளது இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

அகமதாபாத்தில் தொடரும் துயரம்.. விமான விபத்தில் பலி எணிக்கை உயர்வு

அகமதாபாத் விமான விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது விமானம் மோதியதில் 33 பேர் உயிரிழந்ததால் பலி எணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.

அகமதாபாத் விமான விபத்து எதிரொலி.. DGCA அதிரடி உத்தரவு

ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவு பிறப்பித்துள்ளது.

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்!

அகமதாபாத்தில் விமான விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இறந்து விட்டதாக நினைத்தேன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய நபர் பேட்டி

முதலில், தான் இறந்துவிட்டதாக நினைத்ததாகவும், தான் உயிருடன் இருப்பதை நம்பமுடியவில்லை என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிர்தப்பிய விஷ்வாஷ்குமார் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா விமானத்தை தவறவிட்ட பெண்.. நூலிழையில் உயிர் தப்பினார்

அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் செல்லும் விமானத்தில் பயணிக்க இருந்த பூமி சௌகான் என்ற பெண், விமான நிலையத்துக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றதால் நூலிழையில் உயிர் தப்பினார்.

உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை - 131வது இடத்திற்கு சரிந்த இந்தியா!

உலக பொருளாதார கூட்டமைப் பின் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில் 131-வது இடத்திற்கு சென்றது இந்தியா. மொத்தம் 146 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியா 2 இடங்கள் சரிந்துள்ளது.

அகமதாபாத் விமான விபத்து : குஜராத் முன்னாள் முதலமைச்சர் உயிரிழப்பு..!

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான விஜய் ரூபாணி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள தனது மகளைப் பார்க்க அவர் புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்து.. 242 பயணிகளுடன் நிலை என்ன?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்டஏர் இந்தியாவின் AI171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வண்டி எப்படி திரும்பும்? 90 டிகிரி வளைவில் மேம்பாலம்.. எதிர்கட்சிகள் கடும் விமர்சனம்

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பகுதியில் 90 டிகிரி வளைவுடன் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது முதல் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மேம்பால பணிகள் குறித்து ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கடலில் மூழ்கிய எல்சா 3 சரக்கு கப்பல்: உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு!

எல்சா 3 சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய விபத்து தொடர்பாக, கேரளா ஃபோர்ட் கொச்சி கடலோர காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், கப்பல் உரிமையாளர் முதல் குற்றவாளியாகவும், கப்பல் மேலாளர் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இனி ஆதார் கட்டாயம்.. ரயில்வே வெளியிட்ட புதிய அறிவிப்பு..!

IRCTC கணக்குடன் கட்டாயம் ஆதாரை இணைக்க ரயில்வே அறிவுறுத்தியுள்ள நிலையில், ஜூலை 1 முதல் ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேரள கடலில் தீப்பிடித்த சிங்கப்பூர் கப்பல்.. வெடித்துச்சிதறும் அபாயம்..!

கேரளக் கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் வான்ஹாய் 503 என்ற சரக்குக் கப்பல் வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஏசி யூஸ் பண்றீங்களா?.. மத்திய அரசு கொண்டு வரும் புது ரூல்ஸ்

ஏசி பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளளவும், சோதனை அடிப்படையில் இது கொண்டுவரப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

வரதட்சணையாக கிட்னியை கேட்ட மாமியார்.. மருமகள் அதிர்ச்சி

வரதட்சணையாக பைக், பணம், நகைகள் கொண்டு வர முடியாததால், தன் கணவருக்கு சிறுநீரகத்தை தானம் செய்ய மாமியார் வற்புறுத்தியதாக பெண் ஒருவர் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவில் பரபரப்பு: மன்னிப்பு கேட்ட சுகாதாரத்துறை அமைச்சர்.. நிராகரித்த அரசு மருத்துவர்!

கோவாவில் சுகாதாரத்துறை அமைச்சரின் 'ஸ்டுடியோ மன்னிப்பை' நிராகரித்துள்ளார் அரசு மருத்துவர். தான் அவமானப்படுத்தப்பட்ட அதே மருத்துவமனையில் அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அரசு மருத்துவர் தெரிவித்துள்ளார்.

வீடு புகுந்து முதியவரை கொலை செய்த பெண்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்

ஒடிசாவில் பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 60 வயது முதியவரை, பெண்கள் குழு ஒன்று வீடு புகுந்து கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹனிமூன் ஜோடி மிஸ்ஸிங் வழக்கில் ட்விஸ்ட்.. வழிகாட்டி கொடுத்த துப்பு: 4 பேர் கைது

புதுமணத்தம்பதியினர் மேகாலயாவிற்கு தேனிலவிற்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கணவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மனைவியை போலீசார் தேடி வந்த நிலையில், சுற்றுலா வழிகாட்டி கொடுத்த தகவலால் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியே கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மனைவி மீது சந்தேகம்: தலையுடன் காவல் நிலையம் வந்த கணவர்-பெங்களூரில் பரபரப்பு

மனைவியை கொன்று தலையுடன் காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ள கணவரின் செயல் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு கூட்டநெரிசலில் உயிரிழப்பு: கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா

பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், தார்மீகப் பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.

புதிய ரக மாம்பழத்திற்கு அமைச்சர் ’ராஜ்நாத் சிங்’ பெயரை சூட்டிய மாம்பழ மனிதர்!

இந்தியாவின் புகழ்பெற்ற 'மாம்பழ மனிதர்' என அழைக்கப்படும் கலீமுல்லா கான், புதிதாக உருவாக்கப்பட்ட மாம்பழ இரகத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பெயரை அடிப்படையாக கொண்டு 'ராஜ்நாத் ஆம்' (Rajnath Aam) எனப் பெயரிட்டுள்ளார்.

கோலியை கைது பண்ணுங்க.. சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் ’Arrest kohli’ ஹேஷ்டாக்

ஆர்சிபி அணிக்காக நடைப்பெற்ற பாராட்டு விழாவினை காண, சின்னசாமி மைதானத்திற்கு வெளியே குவிந்த ரசிகர்களிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பேசுப்பொருளாகியுள்ள சூழ்நிலையில் #Arrestkohli என்கிற ஹேஸ்டாக் எக்ஸ் வலைத்தளத்தில் ட்ரெண்டாகிறது.