K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்கள் – முதல்வரிடம் உதவி கோரி வீடியோ

ஈரான், இஸ்ரேல் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை தங்களை மீட்கக்கோரி வீடியோ வெளியிட்டு தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேங்கை வயல் போல் மற்றொரு சம்பவம்.. மலம் கழித்த மர்ம நபர்கள்?

திண்டுக்கல் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்குள் இறங்கி மலம் கழித்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

4 ஆண்டுகளாக தமிழ்நாட்டை முதலமைச்சர் சீரழித்துள்ளார் - எல். முருகன் விமர்சனம்

4 ஆண்டுகளாக தமிழ்நாட்டை சீரழித்து செயல்படாத முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் உள்ளார் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணன்... 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்த நீதிமன்றம்!

தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டணையுடன், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கபட்டுள்ளது. கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டது நீதிமன்றத்தில் நிரூபணமானதால், குற்றவாளிக்கு கடுங்காவல் தண்டணை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

போலீசார் விசாரணையில் இளைஞர் மரணம்.. பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

சிவகங்கை அருகே விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், அவரது உடலில் 18 இடங்களில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சிறுவன் கடத்தல் வழக்கு.. ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம்

ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கோயிலில் குத்தாட்டம் ஆடிய அர்ச்சகர்கள்.. தமிழ்நாடு பயிற்சி பள்ளியில் படிக்கவில்லை மாணவர் சங்கம்!

ஸ்ரீவில்லிபுதூர் கோயிலில் குத்தாட்டம் போட்டவர்கள் தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படிக்கவில்லை என அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினர், பொய்யான கருத்துக்களை பரப்பி வரக்கூடிய பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்டவர்கள் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு மற்றும் அஸ்மிதா மீது பங்குச்சந்தை மோசடி வழக்கு – மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

பிரபல இன்ஸ்டாகிராம் பிரபலம் விஷ்ணு மற்றும் அவரது மனைவி, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அஸ்மிதா ஆகியோர் ஆன்லைன் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோட்டூர்புரம் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள்.. அறநிலையத்துறை அளவீட்டு பணி தொடக்கம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி, தண்டனை பெற்ற குற்றவாளி ஞானசேகரன் கட்டியுள்ள வீடு கோயில் நிலத்தில் அமைந்துள்ளது விசாரனையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் அப்பகுதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் குறித்து கோட்டூர்புரத்தில் அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

பரந்தூர்: அடுத்த கட்ட போராட்டம் அறிவிப்பு

அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளது பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்ட எதிர்ப்பு குழு

கோவையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்...விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பதற்றம்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் கோவை வருகை தந்துள்ள நிலையில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.1 லட்சம் கடனுக்காக தம்பதி கடத்தல்- சினிமா பாணியில் துரத்தி பிடித்த போலீஸ்

புதுக்கோட்டையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்று கூறி கணவன் -மனைவியை காரில் கடத்திய சம்பவம் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் நவம்பரில் திறப்பு – அப்பேட் கொடுத்த அமைச்சர்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி

மருதமலை கோவிலில் பாதுகாப்பு துறை அமைச்சர் சுவாமி தரிசனம்!

கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார்.

இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது.. ஜூலை 3 வரை இலங்கை நீதிமன்ற காவல்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை, ஜூலை 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஷ்ணு விஷால் தயாரிப்பில் 'ஓஹோ எந்தன் பேபி': ட்ரெய்லரை வெளியிட்ட சிம்பு!

விஷ்ணு விஷால் தயாரிப்பில் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ள 'ஓஹோ எந்தன் பேபி' பட ட்ரெயிலரை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டார். மேலும், இத்திரைப்படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னை விமான நிலையத்திற்கு மர்ம நபர்களால் இ-மெயில்கள் மூலம், அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் திராவிட சித்தாந்த கூட்டணி ஆட்சி தான் - விஜய் பிரபாகரன்

"கேப்டன் ஸ்டைல் வேற, விஜய் ஸ்டைல் வேற" என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் கைது- ஜெய்சங்கருக்கு முதலமைசர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையால் கைதான 8 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 8 மீனவர்களின் மீன்பிடி படகை பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்; மீனவர்கள் கைது, உபகரணங்கள் இழப்பு பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு மன உளைச்சலை தருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்புவனத்தில் இளைஞர் மரணம்: வழக்குப்பதிந்து கைது செய்க- தவெக வலியுறுத்தல்

காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணத்தில் தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தவெக வலியுறுத்தியுள்ளது.

குப்பையில் வீசப்பட்ட ஜெயலலிதா புகைப்படம்- அதிமுக கண்டனம்

அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் குப்பையில் வீசப்பட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

'டிராகன்' திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா!

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரின் வழிகாட்டலில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் - கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான 'டிராகன்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு.. 6 காவலர்கள் பணியிடை நீக்கம்!

சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், கடை அடைப்பு உள்ளிட்ட அடுத்த சம்பவங்களால் மடப்புரத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

நடிகர்கள் மட்டும் போதைப்பொருள் பயன்படுத்துவதில்லை – காயத்ரி ரகுராம்

அதிமுக தேர்தல் பிரசாரம் என்பது மக்கள் பிரச்னைகளை மையப்படுத்தியே இருக்கும் என காயத்ரி ரகுராம் பேச்சு

வெளிநாட்டில் அமைச்சர்.. கடலுக்கு செல்லும் காவேரி நீர்.. விவசாயிகள் சங்கம் கண்டனம்

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளிநாட்டில் இருப்பதால் மயிலாடுதுறை - கடலூர் மாவட்டங்களில் காவிரி நீரை பாசனத்திற்கு திறக்காமல் கடலுக்கு திறந்து விட்டுள்ளதாக நீர்வள ஆதாரத்துறைக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.