K U M U D A M   N E W S

ஆட்சி கவிழ்க சதி: அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள்.. தலைமறைவான செ.பா தம்பி?

தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்டத்தாக திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி ட்விஸ்டுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

பணம் வராமல் தவிக்கும் விவசாயிகள்... நெல் கொள்முதலில் புதிய பிரச்னை!

மத்திய அரசு சார்பில் ஏஜென்ட்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நெல் கொள்முதலுக்கான பணம் பல மாதங்களாக வழங்கப்படாததால், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்ட விவசாயிகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம்: “தமிழிசை கருத்து சரிதான்” – நயினார் நாகேந்திரன்

திமுகவை பாஜகவும், விஜய்யும் தான் வீட்டுக்கு அனுப்புவோம் என்ற தமிழிசை கருத்து சரிதான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி மக்களுக்குக் கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார்? அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி!

எடப்பாடி மக்கள் மீது கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.

“பிடுங்கி நட்டால் பயிர் பெரிதாகத்தான் வளரும்” – மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு அமைச்சர் நேரு பதிலடி

திமுக அரசை வேரோடு பிடுங்குவோம் என்ற மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார்.

செல்ஃபி எடுக்க முயன்ற நிர்வாகியின் கையை தட்டிவிட்ட வைகோ...கும்பகோணம் மதிமுக பொதுக்கூட்டத்தில் சலசலப்பு

கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு அனுமதி அளிக்காத ஆளுநருக்கு வைகோ கண்டனம்

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: விரைவில் முதலமைச்சர் முடிவெடுப்பார்- அமைச்சர் கே.என்.நேரு

520 வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம். நிதிநிலை சேர்ந்தவுடன் தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என அமைச்சர் கே.என்.நேரு பதில்

வாகன ஓட்டிகள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. ஏஎன்பிஆர் கேமரா பொருத்தும் பணி தீவிரம்!

சென்னையில் விதிமீறும் வாகன ஓட்டிகள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது முக்கிய சாலைகளில் ஏஎன்பிஆர் கேமரா பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இரண்டு மாத காலத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு வர சென்னை போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் 54-வது தலைமை நீதிபதியாக மனீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா இன்று பதவியேற்றார். ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பஞ்சாப் அரசு அதிரடி நடவடிக்கை: குழந்தை கடத்தல் கும்பலுக்குச் செக்!

பஞ்சாப் மாநிலத்தின் தெருக்களில் யாசகம் பெறும் குழந்தைகளுக்கும் அவர்களுடன் உள்ள பெரியவர்களுக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. யாசகம் செய்வோர் உண்மையிலேயே குழந்தையின் ரத்த உறவா என அறியவே சோதனையெனத் தகவல் தெரிவித்துள்ளார்.