K U M U D A M   N E W S
Promotional Banner

அருள் நீக்கம்: அன்புமணிக்கு அதிகாரம் இல்லை- ராமதாஸ்

பாமகவில் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது என ராமதாஸ் பேட்டி

பாமக எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம்.. அன்புமணி அதிரடி முடிவு

பாமக எம்எல்ஏ அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

சித்ரகுப்த சுவாமி கோயில் தேங்காய் கடை ரூ.30 லட்சத்திற்கு ஏலம்!

சித்ரகுப்த சுவாமி திருக்கோயிலில் தேங்காய், பூ, மற்றும் பழம் விற்பணை செய்யும் கடை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் 21 லட்சத்திற்கு மேல் ஏலம் போன நிலையில், தற்போது, சுமார் 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. பொது ஏலத்தில் மாறி மாறி ஏலத்தாரர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டதால் அதிக விலைக்கு ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'டிராகன்' திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா!

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரின் வழிகாட்டலில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் - கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான 'டிராகன்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அகமதாபாத் விமான விபத்து: ஐ.நா-வின் உதவியை நிராகரித்தது இந்தியா..!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணையில் ஐ.நா. உதவ முன்வந்த நிலையில், இந்தியா அதனை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்து கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் மீட்பு.. விசாரணை தீவிரம்!

ஏர் இந்தியா விமானத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில், அவ்விமானத்தின், கருப்புப் பெட்டியில் இருந்த தரவுகள் மீட்கப்பட்டதாகவும், தகவல்களை பிரித்தெடுத்து விசாரிக்கும் பணிகள் நடப்பதாகவும் தகவல் பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகள் மூலம் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க ஆய்வு நடக்கிறது - விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏடிஎம் மையங்களில் நூதனக் கொள்ளை.. வட மாநில இளைஞரின் புகைப்படம் வெளியீடு..!

சென்னையில் பல்வேறு பகுதிகளில் சினிமா பாணியில் ஏ.டி.எம் மையங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வட மாநில ஆசாமியின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டன. சம்பந்தப்பட்ட வட மாநில நபர் குறித்து பொதுமக்கள் அடையாளம் காண்பதற்காக சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

சோகத்தில் அதிமுக.. வால்பாறை எம்.எல்.ஏ. காலமானார்

வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

விமான விபத்து எதிரொலி.. ஏர் இந்தியாவின் முன்பதிவு சரிவு

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு, ஏர் இந்தியா விமானத்தின் முன்பதிவு 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய சுற்றுலா ஆபரேட்டர்களின் சங்க தலைவர் ரவி கோசைன் தெரிவித்துள்ளார்.

பீகாரிலிருந்து கினி நாட்டுக்கு ரயில் என்ஜின் ஏற்றுமதி – தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பீகாரில் இருந்து கினி நாட்டுக்கு ரயில் என்ஜின் ஏற்றுமதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஒடிசாவில் 18,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளும் இன்று தொடங்குகிறது.

சிறுவன் கடத்தல் வழக்கு- ஏடிஜிபியை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை?

ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்ய தமிழக காவல்துறை, மாநில உள்துறைக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு – அவசரமாக தரையிறக்கம்

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கொல்கத்தா வழியாக மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சிறுவன் கடத்தல் வழக்கு- ஏடிஜிபி சிறையில் அடைப்பு

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சிறையில் அடைக்கப்பட்டார்.

2026ல் தவெக-வின் தாக்கத்தை மக்கள் முடிவு செய்வார்கள்- டிடிவி தினகரன்

அமமுக இன்னும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறது என டிடிவி தினகரன் பேட்டி

ஓபிஎஸ் எம்.எல்.ஏ. பதவிக்கு சிக்கல்.. சபாநாயகர் அப்பாவு பதில்

ஓ.பன்னீர் செல்வத்தின் எல்.எல்.ஏ. பதவியை பறிக்க கோரி அவரது தொகுதியை சேர்ந்த நபர் அளித்த புகாரின் பேரில் சட்ட ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் – தூதரகம் தற்காலிகமாக மூடல்

இஸ்ரேலின் டெல் அவீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய தாக்குதலில் தூதரகம் சேதமடைந்துள்ளதால் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி தெரிவித்துள்ளார்.

குரூப்-1, 1 ஏ தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? டி.என்.பி.எஸ்.சி தலைவர் கொடுத்த அப்டேட்

குரூப்-1, 1ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் தொடரும் துயரம்.. விமான விபத்தில் பலி எணிக்கை உயர்வு

அகமதாபாத் விமான விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது விமானம் மோதியதில் 33 பேர் உயிரிழந்ததால் பலி எணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.

அகமதாபாத் விமான விபத்து எதிரொலி.. DGCA அதிரடி உத்தரவு

ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், புக்கெட்டில் அவசர தரையிறக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சோதனை நடைபெற்றது. சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தகவல் வெளியானது.

இறந்து விட்டதாக நினைத்தேன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய நபர் பேட்டி

முதலில், தான் இறந்துவிட்டதாக நினைத்ததாகவும், தான் உயிருடன் இருப்பதை நம்பமுடியவில்லை என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிர்தப்பிய விஷ்வாஷ்குமார் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா விமானத்தை தவறவிட்ட பெண்.. நூலிழையில் உயிர் தப்பினார்

அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் செல்லும் விமானத்தில் பயணிக்க இருந்த பூமி சௌகான் என்ற பெண், விமான நிலையத்துக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றதால் நூலிழையில் உயிர் தப்பினார்.

ஏசி யூஸ் பண்றீங்களா?.. மத்திய அரசு கொண்டு வரும் புது ரூல்ஸ்

ஏசி பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளளவும், சோதனை அடிப்படையில் இது கொண்டுவரப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

மனு ஏற்பு: மாநிலங்களவை எம்.பி ஆகிறார் கமல்ஹாசன்

வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 12-ந் தேதியாகும். அன்றைய தினம் களத்தில் உள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் பாமகவுக்கு இதுதான் கடைசி தேர்தல்- ஜோதிமணி எம்.பி

பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால் பா.ம.க-வோ, அ.தி.மு.க-வோ இதுதான் அவர்களுக்கு கடைசி தேர்தலாக இருக்கும் என கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.