K U M U D A M   N E W S

சின்ன தல ஆன் போர்டு.. தமிழ் சினிமாவில் களமிறங்கும் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

‘என்ன தவம் செய்தேன்..’ நடிகர் எஸ்.ஜே.சூர்யா உருக்கம்

“கில்லர்’ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதும் என் மீது அளவற்ற அன்பை பொழிந்த அனைவர்க்கும் நன்றி” என்று நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

குப்பையில் வீசப்பட்ட ஜெயலலிதா புகைப்படம்- அதிமுக கண்டனம்

அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் குப்பையில் வீசப்பட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

‘குபேரா’ படத்தின் வசூல் நிலவரம்.. எவ்வளவு தெரியுமா?

தனுஷ் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியனான ‘குபேரா’ படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டு, தங்களது அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர்.

'ஜன நாயகன்' தான் விஜய்யின் கடைசி படமா? மமிதா பைஜூ சுவாரஸ்ய தகவல்

இதுதான் உங்களுக்கு கடைசி படமா? என்று விஜய்யிடம் கேட்டபோது, 'எனக்கு தெரியவில்லை' என அவர் பதிலளித்ததாக நடிகை மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்.

வெப் சீரிஸாக வெளியாகும் 'ரெட்ரோ' திரைப்படம் ?

நடிகர் சூர்யாவின் 'ரெட்ரோ' திரைப்படத்தை கூடுதல் காட்சிகளுடன் வெப் தொடராக வெளியிட திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

'தக் லைஃப்' பட விவகாரம்.. கமலுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் கருத்து

கர்நாடகாவில் 'தக் லைஃப்' படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது எனவும், திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைவிடப்படும் 'மார்கோ-2'.. ரசிகர்கள் ஏமாற்றம்

எதிர்மறையான கருத்துக்கள் அதிகம் வருவதால் 'மார்கோ' படத்தின் 2 ஆம் பாகத்தை கைவிடுவதாக நடிகர் உன்னி முகுந்தன் தெரிவித்துள்ளார்.

தந்தை வழியில்.. இயக்குநராகும் பார்த்திபனின் மகன்

தனது மகன் ராக்கி பார்த்திபன், விரைவில் கமர்ஷியல் த்ரில்லர் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

சூர்யா மாதிரி தம்பிக்காக எதுவும் செய்வேன்.. விஷ்ணு விஷால்

சூர்யா - கார்த்தியை போல் நாங்களும் ஒற்றுமையாகத்தான் இருப்போம் என்றும், வருங்காலத்தில் தம்பி ருத்ராவுக்காக தொடர்ந்து படம் தயாரிப்பேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

'தக் லைஃப்' படத்தின் 3 நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவான 'தக் லைஃப்' திரைப்படம் வெளியான 3 நாட்களில் ரூ.30.15 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தக் லைஃப் படத்தில் சாதிபெயர் நீக்கம்-விமர்சனம் எழுந்ததால் நடவடிக்கை

தக் லைஃப் முன்னோட்ட வீடியோவில் இடம் பெற்ற சாதிப்பெயரை படக்குழு நீக்கியுள்ளனர்

தக் லைஃப் திரைப்படத்திற்கு நடிகர் சிலம்பரசன் பொருத்தமானவர் - இயக்குநர் மணிரத்னம்

தக் லைஃப் திரைப்படத்திற்கு நடிகர் சிலம்பரசன் தான் மிகவும் பொருத்தமான நடிகர் என்று இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

சண்டை காட்சிகளே இல்லாத திரைப்படம்.. தாவுத் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் வெளியீடு!

கேங்ஸ்டர் படம் என்றாலே அடிதடி வெட்டு குத்து என சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் தற்போது " தாவுத் " என்ற பெயரில் அடிதடி வெட்டு குத்து சண்டை காட்சிகளே இல்லாத ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படம் உருவாகிறது.

சென்னையில் ‘குபேரா’ இசை வெளியிட்டு விழா...தேதி அறிவித்த படக்குழு

தனுஷ், நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள குபேரா படத்தின் இசை வெளியிட்டு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் ஜூன் 6 முதல்.. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் மெட்ராஸ் மேட்னி..!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, 'மெட்ராஸ் மேட்னி' திரைப்படம், ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

த்ரில்லர் கதைக்களத்தோடு மே 30-ல் வெளியாகும் “மனிதர்கள்” திரைப்படம்!

திரில்லர் கதைக்களத்தில் உருவான மனிதர்கள் திரைப்படம் மே 30 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

உண்மையை உடைத்த எடிட்டர்.. இயக்குநர் ஷங்கரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

”கேம் சேஞ்சர் படத்தின் மொத்த நீளம் 7.5 மணி நேரம், இயக்குநர் ஷங்கரின் வேலை அணுகுமுறை தமக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் பாதியிலேயே கேம் சேஞ்சர் படத்திலிருந்து வெளியேறினேன்” என எடிட்டர் ஷமீர் முகமது தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

இயக்குநர் ராமின் பறந்து போ.. மனதை கவரும் சூரியகாந்தி ப்ரோமோ

தமிழ் சினிமாவில் மிக குறைவான படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும், திரையுலக பிரபலங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் தன் படைப்பின் மூலம் நன்மதிப்பை பெற்ற இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான “பறந்து போ” திரைப்படத்திலிருந்து Sunflower - "not a single, not a teaser" ப்ரோமோ வெளியாகியுள்ளது.

என் அன்பு செல்வங்கள் இனி இதுபோன்று செய்ய மாட்டார்கள் - நடிகர் சூரி

ஒரு படத்தை கொண்டாட எவ்வளவோ விதம் உள்ள நிலையில், இது போன்ற கொண்டாட்டம் தேவையில்லை என்று என் அன்பு செல்லங்களுக்கு ஏற்கனவே சொல்லிவிட்டேன். இனிமேல் இதுபோன்று செய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன் என மதுரையில் நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

‘டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்திற்கு தடை?- நடிகர் ஆர்யாவுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

நடிகர் சந்தானம் நடித்துள்ள "டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட் லெவல்" திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய மனுவுக்கு படத்தயாரிப்பாளர் நடிகர் ஆர்யா உள்பட இருவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Cannes Film Festival 2025: கேன்ஸ் திரைப்பட விழா... அதிகார பூர்வ போட்டியில் இடம்பிடித்த தமிழ்த்திரைப்படம்!

Cannes Film Festival 2025 : “மாண்புமிகு பறை” திரைப்படம் கேன்ஸ் 2025 திரை விழாவில் அதிகார பூர்வ போட்டியில் பங்கேற்று ஜூரி மெம்பர்ஸால் படம் பார்க்கப்பெற்றது.

வரவேற்ப்பை பெற்றுள்ள மனிதர்கள் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கத்தில், ஒர் இரவில் நடக்கும் திரில்லர் கதையில் உருவான “மனிதர்கள்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

மக்கள் செல்வனுடன் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்திய படத்தில் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், ரசிகர்கள் இத்திரைப்படத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள்