Headlines | 09 மணி தலைப்புச் செய்திகள் 09 AM Today Headlines Tamil | 23-11-2024 | Kumudam News
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது
கிண்டி அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுப்படி செய்தது.
வருகின்ற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு வாழ்வா, சாவா என்று இருக்கப்போகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்து உள்ளார்.
ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் சரணடைந்தவரின் மனைவியும் கைது
கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், தாக்குதலுக்கு ஆளான மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிவுபெற்று வீடு திரும்பினார்.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளதாகவும் ஜாபர் சாதிக் ஜாமின் மனுவில் தெரிவித்துள்ளார்.
தொழில்துறையை மேம்படுத்துவதற்கும், திறன்களை வளர்க்கவும் 'மலிவு வங்கி வட்டி விகிதங்கள்' தேவை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கோவை அருகே திருமணம் கடந்த உறவில் வசிப்பதற்காக மனைவியை கொலை செய்ய உதவிய நபர் மிரட்டியதால் ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி கொலை செய்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்ற நிபந்தனையை பூர்த்தி செய்யாததால், ரவுடி சீர்காழி சத்யா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெற்ற சென்னை உயர் நீதிமன்றம், உடனடியாக அவரை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை, குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடுத்தர வர்க்கத்தினருக்கு கொஞ்சம் நிவாரணம் கொடுங்கள் என நிதியமைச்சருக்கு எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் கோரிக்கை வைத்த நிலையில், நிர்மலா சீதாராமன் அந்த பதிவிற்கு பதிலளித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று இரவு 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று இரவு 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
அண்ணன் தங்கை உறவுமுறை கொண்ட சகோதரரும், சகோதரியும் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், நீதிமன்றத்தில் பெண்ணின் காலில் விழுந்து தாய் கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
என்னை கொலை செய்ய வந்தாலும் மன்னிச்சிடுவேன்! ஆனால் கட்சிக்கு துரோகம் செய்தால் மன்னிக்க மாட்டேன் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
விமர்சனம் செய்யும் போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடனும் பேச வேண்டும் என்று சி.வி.சண்முகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
கொடநாடு வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 225 இடங்களில் 159 இடங்களை வென்று அதிபர் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது
ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக கூறிக் கொண்டு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சியினரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை கூறுகின்றனரே தவிர, நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயகவின், தேசிய மக்கள் சக்தி கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.
மருத்துவ கவுன்சிலின் விதிகளை மீறி தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்காததால் விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்