நாளை வெளியில் செல்லும் வாகன ஓட்டிகளா நீங்கள்...போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு
கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் முறையாகப் பணிக்கு வராமல், சட்ட விரோதமாக விடுப்பில் இருந்த 51 அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சுங்கச்சாவடிகளில் நான்கு வாரங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்க தடை விதித்த கேரள உயர்நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் ஊதிய உயர்வு கோரி அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் அரசுப் பேருந்துகள் ஓடாததால், பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர்.
கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மூணாறு - தேனி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையை சீர் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சென்னையில் விதிமீறும் வாகன ஓட்டிகள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது முக்கிய சாலைகளில் ஏஎன்பிஆர் கேமரா பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இரண்டு மாத காலத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு வர சென்னை போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.
அண்டை மாநிலமான கேரளத்தில் நிபா வைரஸ் காய்ச்சலால் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நோய்களைக் குணப்படுத்த வேண்டிய அரசு மருத்துவமனைகளே நோய்களை உற்பத்தியாக்கும் மையமாகச் செயல்படுவதா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரள மாநிலம், பாலக்காடு மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்பட்டு உள்ளதால், கேரள மாநிலம் முழுவதும் உஷார்ப்படுத்தப்பட்டு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து விமானத்தில் பயணிக்க இருந்த 164 பயணிகள் ஒட்டல்களில் தங்க வைப்பு
ஏர் இந்தியா விமானத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில், அவ்விமானத்தின், கருப்புப் பெட்டியில் இருந்த தரவுகள் மீட்கப்பட்டதாகவும், தகவல்களை பிரித்தெடுத்து விசாரிக்கும் பணிகள் நடப்பதாகவும் தகவல் பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகள் மூலம் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க ஆய்வு நடக்கிறது - விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் நிலவு வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய கிழக்கு பகுதிகளில் வான்வழி மூடப்பட்டுள்ளது. இதனால், சென்னை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
லண்டனில் இருந்து சென்னைக்கு 360 பயணிகளுடன் வந்த விமானம் நடு வானில் பறந்து போது திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, விமானம் லண்டனுக்கு அவசரமாக திரும்பிச் சென்று தரையிறங்கியது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று (ஜூன் 6) முதல் தொடங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கினைத் தொடர்ந்து ஆண்டுதோறும் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்க குழு அமைத்துள்ளது தமிழக அரசு.
நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ரவியுடனான திருமண பந்தத்தை முறித்துக் கொள்ள முடிவெடுத்த நிலையில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது இணையதளங்களில் பேசுப்பொருளாகியுள்ள நிலையில், மீண்டும் ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துவரும் நிலையில், தற்போது 257 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு தகன மேடையில் தகனத்திற்காக பிணங்கள் காத்திருந்த சம்பவம் விவாதங்களை எழுப்பிய நிலையில் எதிர்பாராத கோடை மழையால் ஏற்பட்ட மின் தடை தான் காரணம் என மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். திமுகவின் வாக்குறுதிகளில் முதன்மையான மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிப்பு முறை குறித்த கேள்விக்கும் பதிலளித்துள்ளார் அமைச்சர் சிவசங்கர்.
சென்னையில் இருந்து திருச்சி, தூத்துக்குடி, மதுரை, ஆகிய நகரங்களுக்கு செல்லும் 8 விமானங்கள் முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் அவதியடைந்தனர்.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், ரெயில் பாதையில் விழுந்த ராட்சச பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. ரெயில் பாதையை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் இரண்டாவது நாளாக மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
கேரளாவில் மீண்டும் பெண் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து, குரோஷியா, நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பயணங்களை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்துள்ளதாகவும், மேலும், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.