போதைக் கூடாரமாகும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு...! - அச்சத்தில் பொதுமக்கள்!
Tamilnadu Housing Board: போதைக் கூடாரமாகும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு. போதை ஊசி போட்டப்படி இளைஞர்கள் செய்யும் அலப்பறைகள்.
Tamilnadu Housing Board: போதைக் கூடாரமாகும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு. போதை ஊசி போட்டப்படி இளைஞர்கள் செய்யும் அலப்பறைகள்.
எல்லா பண்டிகைகளுக்கும் முதல் ஆளாக வாழ்த்துச் சொல்லும் நடிகரும் தவெக தலைவருமான விஜய், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது குறித்து சர்ச்சையை கிளப்பியுள்ளது பாஜக.
''அரச நிர்வாகத்தில் எத்தகைய தவறு நிகழ்ந்தாலும் அரசும், தொடர்புடைய அமைச்சகமும் தங்களைத் தற்காத்துக்கொள்ள முனையாமல் தவறுக்கான முழுப்பொறுப்பையும் ஏற்று, மக்களிடம் மன்னிப்புக்கோருவதோடு, இனி அத்தவறுகள் நிகழாது என உறுதியளித்து அதன்படி செயல்படுவதுதானே ஒரு நல்ல அரசின் நேர்மையான நிர்வாக நடைமுறையாக இருக்க முடியும்?'' என்று சீமான் கூறியுள்ளார்.
வேலூரில் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
RS Bharathi : மணிப்பூர் உத்திரபிரதேசம் குஜராத் மாநிலத்தில் உள்ள சம்பவங்களை விட, தமிழகத்தில் பெரிதாக ஒன்று குற்றசம்பவங்கள் நடக்கவில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
''பள்ளிக்கல்வித்துறை அனுமதி கொடுக்காமல் நிகழ்ச்சி நடந்ததா? பள்ளிக்கல்வித்துறை, தலைமை ஆசிரியரை பலி ஆடாக ஆக்குவதற்கு பதிலாக அமைச்சர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்வது பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல'' என்று தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
உங்கள் பெயர் என்ன? பள்ளிகளில் மதம் குறித்து பேசக்கூடாது என்று யார் சொன்னது? என்று மகா விஷ்ணு மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் மிக கடுமையாக நடந்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. மகாவிஷ்ணு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
சென்னை அரசு பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை அறிக்கையை ஐந்து நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் தொடர்ந்து இதுபோல் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கு பொறுப்பேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
கல்வியே சமத்துவ மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் எனும் நிகழ்ச்சி சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இதில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
சிறையில் முதல் முறை குற்றவாளிகளை தனியாக வைப்பதற்கு திட்டங்கள் ஏதும் உள்ளதா? என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது
பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று சென்னை திரும்பிய தமிழக வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Dengue Fever in Tamil Nadu : கர்நாடகாவில் டெங்கு அவசர நிலை அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் எல்லையோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருப்பூர் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது
கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சென்னை உட்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ. 1.5 கோடி அபராதம்.
குரங்கம்மை சிகிச்சை முறைகள் என்னென்ன என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு.
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டீன் பணியிடங்களை விரைவாக நிரப்ப உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
தமிழ்நாட்டில் குரங்கம்மை அச்சுறுத்தல் இருப்பதால் திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
காவிரியின் குறுக்கே அணை கட்டுவோம் என்று வாரத்துக்கு ஒரு முறை தவறாமல் கூறி வரும் டி.கே.சிவக்குமார், இன்று சென்னையிலும் அதே கருத்தை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேகதாது அணை கட்ட வேண்டும் என்பதில் கர்நாடகாவின் முந்தைய பாஜக அரசும் சரி, இப்போதைய காங்கிரஸ் அரசும் சரி எந்தவித கருத்து வேறுபாடு இன்றி தெளிவாக உள்ளது
கொல்கத்தா சம்பவம் எதிரொலியாக தமிழ்நாட்டில் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலப் பணி இயக்கனரகம்.
தமிழகத்தில் அதிக அளவில் இளைஞர்கள் இருப்பதால் புதிய கல்விக் கொள்கையை புகுத்த மத்திய அரசு முயற்சி செய்வதாக எம்.பி. தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியுள்ளார்.