அரசுப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவின்போது பார்வை மாற்றுத்திறனாளியை அவதூறாக பேசிய வழக்கில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பான அறிக்கை இந்த வார இறுதியில் தலைமைச் செயலாளரிடம் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது
மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. அதை காண ஏராளமான பள்ளி மாணவர்கள் குவிந்ததால் அவர்கள் சுடும் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.
Caste wise Census in India:சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என ஆந்திரா அரசு RTI மூலம் தகவல் தெரிவித்ததால் தமிழ்நாடு அரசுமீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மகாவிஷ்ணு நடத்திய ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளின் நிலவரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விரைவில் அவர் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு பேசிய வீடியோ பரம்பொருள் பவுண்டேஷன் என்ற யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது
மகா விஷ்ணு பள்ளியில் பேசுவது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் தங்களிடம் அனுமதி பெறவில்லை என்று தென் சென்னை மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதி மற்றும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இரவு உணவு வாங்கிக் கொடுத்த போலீசாரை வாழ்த்திய மஹா விஷ்ணு, சித்தர்கள் கூறியதாலேயே விநாயகர் சதுர்த்தி என்று தெரிந்தும் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மஹா விஷ்ணு சமூக விரோதியோ அல்லது தீவிரவாதியோ கிடையாது என்றும் வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் என்றும் மஹா விஷ்ணுவின் வழக்கறிஞர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைதான மகாவிஷ்ணுவை தேடி. அவரது சகோதரர் காவல் நிலையம், காவல் நிலையமாக வழக்கறிஞர்களுடன் அலைந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது கூட தெரியாமல், தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் உள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள். மாணவர்கள் மத்தியில் என்ன பேச வேண்டும் என்று சொல்லியதற்கு மாறாக உளறித் தள்ளியதே சர்ச்சைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
ஆன்மிகமா? பகுத்தறிவா? அரசு பள்ளியை சுழன்றடிக்கும் சர்ச்சை, சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் கார்ப்பரேட் சொற்பொழிவாளரை கொண்டு ஆன்மிக போதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.
சென்னை அரசு பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை அறிக்கையை ஐந்து நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளுலும் ஆன்மீகம், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் தொடர்ந்து இதுபோல் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கு பொறுப்பேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் 2 அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்
சென்னையில் அரசுப்பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் சொற்பொழிவு ஆற்றிய மகாவிஷ்ணு, ஆசிரியரை தரக்குறைவாக பேசியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்
சென்னை பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்திய விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளார்
அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் பராமரிப்பு தொடர்பான உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துக் கொண்ட வழக்கில் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தி