சிறுவன் கடத்தல் வழக்கு: ஜெகன் மூர்த்தி ஆஜர்...போலீஸ் குவிக்கப்பட்டதால் பதற்றம்
கடத்தல் வழக்கு தொடர்பாக புரட்சி பாரத கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி திருவாலங்காடு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜர்
கடத்தல் வழக்கு தொடர்பாக புரட்சி பாரத கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி திருவாலங்காடு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜர்
ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்ய தமிழக காவல்துறை, மாநில உள்துறைக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சிறையில் அடைக்கப்பட்டார்.
அமமுக இன்னும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறது என டிடிவி தினகரன் பேட்டி
கோவை மாவட்டத்தில் உள்ள 30 வழித் தடங்களில் 30 மினி பஸ்கள் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
ஆள் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்து ஆஜரான நிலையில், முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து அருவியில் குளிக்க தொடர்ந்து 23வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநகர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஜூலை14- ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தஞ்சையில் திருமண விழாவில் பங்கேற்கச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.
கடத்தப்பட்ட வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி தேடப்பட்டு வரும் நிலையில், எல்லையோர பகுதிகளில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பிரபல தனியார் வங்கியில், வைப்பு நிதியாக வைக்கப்பட்ட ரூ. 4.36 கோடி அமெரிக்க வாழ் இந்தியர்கள் பணத்தை மோசடி செய்த விவகாரம் தொடர்பாக, வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் வங்கி மேலாளர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஷூவுக்குள் மறைத்து வைத்து கொண்டு எடுத்து வந்த துப்பாக்கி தோட்டாவை கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை
தமிழர்களின் ஆன்மீகத்துக்கு எடுத்துக்காட்டான கடவுள்தான் முருகன் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
கல்லணையில் இருந்து பாசனத்திற்காக நீரை திறந்து வைத்த முதல் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மு.க.ஸ்டாலின். 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூன்.22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு 52 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதுத்தொடர்பான முழு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சரே 24 மணி நேரமும் கடைகள் திறக்கலாம் என்று கூறிய பிறகும், போலீசார் இரவு 10, 11 மணிக்கு கடையை பூட்டுங்கள் என்று மாவட்டம் வாரியாக கூறுவதை ஏற்க முடியாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
நள்ளிரவில் பட்டாக்கத்தி பயன்படுத்தி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது
நாகர்கோவில் அருகே திருப்பதி சாரம் டோல் கேட் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டு பேரி கார்டை சேதப்படுத்திய விசிக நிர்வாகிகள் மீதுபோலீசார் வழக்குப்பதிவு
கட்டிட வேலை செய்ய வைப்பது, கழிப்பறைகளை கழுவச் செய்வது, பள்ளியை சுத்தம் செய்வது என, அரசுப் பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக அரசு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் V.சத்திரப்பட்டி காவல் நிலையத்தை அடித்து நொறுக்கி நபர் தப்பி முயன்றதல் வலது கை, இடது காலில் எலும்பு முறிவு மருத்துவமனையில் அனுமதி
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சென்னை வருகையையொட்டி, சென்னையை சிவப்பு மண்டலமாக அறிவித்தது காவல்துறை.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தஞ்சை செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் தொண்டர்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விருதுநகரில் பள்ளிகளில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.