K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

யார் சாமி நீ? கழுத்தில் பாம்பு.. கையில் பீர்.. அடாவடி செய்த நபர்

தர்மபுரியில் மதுக்கடைக்கு கழுத்தில் பாம்பை சுற்றிக்கொண்டு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

மழையில் நனையும் நெல் மூட்டைகள்.. அரசுக்கு கோரிக்கை!

விருத்தாச்சலம் அருகே நான்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், 5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானதால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட 25,000 நெல் மூட்டைகளை குடோனுக்கு எடுத்துச் செல்லாமல் தேக்கமடைந்துள்ள நிலையில், விவசாயிகளின் துயர்போக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி: சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்திற்கு மண்டல அளவிலான தேசிய விருது!

தலைநகர் டெல்லியில் நடைப்பெற்ற தேசிய வேளாண் அறிவியல் கழகத்தின் வேளாண் விருது வழங்கும் நிகழ்வில், தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

ரூ.25-க்கு உணவு டெலிவரி.. ரேபிடோவின் அதிரடி திட்டம்!

பைக் டாக்ஸி மூலம் பிரபலமான ரேபிடோ நிறுவனம் உணவு டெலிவரி சேவையிலும் தன் கால் தடத்தை பதிக்கவுள்ளது. இம்மாத இறுதியில் பெங்களூருவில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடன் தர சிபில் ஸ்கோர் பார்க்கல.. ரிப்போர்ட் தான்: விவசாயிகள் மீண்டும் அதிருப்தி

தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கும் சிபில் பார்த்து மட்டுமே வழங்கப்படும் என மீண்டும் கூட்டுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளதற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மன்னிப்பு கோரியும் பயனில்லை.. ஓட்டுநரை தாக்கிய மேலாளர் மீது வழக்கு

அரசு பேருந்து ஓட்டுநரை செருப்பால் தாக்கிய விவகாரத்தில் உதவி மேலாளர் மாரிமுத்து உள்ளிட்ட நான்கு பேர் மீது ஐந்து பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

18 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு

18 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் பதவி உயர்வு வழங்கியும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

2-வது மாடியிலிருந்து குழந்தையை வீசிக் கொன்ற கொடூரம்.. தாய் கைது

இரட்டை பெண் குழந்தைகளின் அழுகையால் தூக்கமின்றி தவித்த தாய் மன உளைச்சலுக்கு ஆளாகி, வீட்டின் 2வது மாடியில் இருந்து ஒரு குழந்தையை வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து கணவர் போட்ட ஸ்கெட்ச்.. மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

விவாகரத்துக்கு சம்மதிக்காததால் மனைவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்த வெளிநாட்டில் இருந்து கூலிப்படையை ஏவிவிட்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை கட்டையால் தாக்கி கொலை செய்த கணவர்...நாடகமாடியது அம்பலம்

தலையில் கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்து அம்மா உயிரிழந்ததாக கூறி பிள்ளைகளை ஏமாற்றிய தந்தை கைது

வரலாறு மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது – அமைச்சர் தங்கம் தென்னரசு

வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது மத்திய அமைச்சருக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு: தனிநபர்களின் செயல்களால் பிரச்னை.. சபாநாயகர் அப்பாவு

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும், சில தனிநபர்களின் தவறான செயல்கள் தான் பிரச்னையாக இருக்கிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

தமிழின் தொன்மைக்கு அங்கீகாரத்தை வழங்குவோம்- மத்திய அமைச்சர் உறுதி

தமிழின் தொன்மை, தமிழர்களின் நாகரீகம், பண்பாடுகள் குறித்த ஆய்வுக்கு அங்கீகாரம் அளிக்க தங்களுக்கு எவ்வித தயக்கமும் கிடையாது என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை: கால்கள் உடைக்கப்பட்ட மாணவிக்கு கவுன்சிலிங்

மனநல மருத்துவர்கள் மாணவிக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங் வழங்கி உள்ளனர்.

Direct-ஆ முதல்வர் தானா? - விஜய்யை விமர்சனம் செய்த சைதை சாதிக்

வார்டு கவுன்சிலர் கூட ஆகவில்லை, Direct-ஆ முதல்வர் தானா? என தவெக தலைவர் விஜய்யை திமுக பேச்சாளர் சைதை சாதிக் விமர்சனம் செய்துள்ளார்.

பள்ளிக்குள் புகுந்த உடும்பு.. மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்

காஞ்சிபுரம் அருகே அரசு பள்ளிக்குள் உடும்பு நுழைந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் விமானம் மீது மீண்டும் அடிக்கப்பட்ட லேசர் ஒளி...எச்சரிக்கையை மீறிய செயலால் பரபரப்பு

சென்னையில் மூன்றாவது முறையாக தரையிறங்க வரும் விமானங்களின் மீது, சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளியை அடிக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.

சாதனை படைத்த பழங்குடியின மாணவர்.. முதல்வருக்கு கோரிக்கை வைத்த தந்தை

தேசிய சட்டக் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்ற முதல் பழங்குடியின மாணவர் பரத்தின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் என அவரது தந்தை செல்வகுமார் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

பசுவின் வாயில் சிக்கிய சொம்பு.. வைரல் வீடியோ

காஞ்சிபுரம் அருகே பசு மாட்டின் வாயில் மாட்டிக் கொண்ட சொம்பை இளைஞர்கள் போராடி எடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பட்டுக்கோட்டை 10 ரூபாய் டாக்டர் மரணம்- பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

தன்னை பார்க்க வருகைத்தரும் நோயாளிகளிடம் 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்று சிகிச்சை அளித்து வந்த புகழ்பெற்ற பட்டுக்கோட்டை 10 ரூபாய் டாக்டர் கனக ரெத்தினம்பிள்ளை வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரளான பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

தவெகவில் இணைந்த ஐஆர்எஸ் அதிகாரி பெரியார் நினைவிடத்தில் மரியாதை

தவெகவில் இணைந்த ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

மாணவியின் கால்களை உடைத்து பாலியல் தொல்லை...உண்மையை ஒப்புக்கொண்ட காவலாளி

சிட்லபாக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த மேத்யூ(50) என்ற காவலாளி கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்

தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து ஆளுநர் ரவி சாமி தரிசனம் செய்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்-இபிஎஸ்

அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8-ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர்கள் தான் டார்கெட்.. பிரபல தனியார் வங்கி பெயரில் மோசடி

பிரபல தனியார் வங்கி பெயரில் நாடு முழுவதும் சைபர் மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல், தென்னிந்தியாவில் மட்டும் ரூ.50 கோடி அளவில் மோசடி செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.