தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு விலையில்லா தனி வீட்டு மனை பட்டா வழங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என ஆ.ராசா புகழாரம்
குளித்தலை ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு ரயிலில் ஏற முயன்றபோது, ரயில் புறப்பட்டதால் தண்டவாளத்தில் தவறி வீழ்ந்து இரு கால்களையும் இழந்துள்ளார்.
செய்யாறு அருகே தடுப்புகளை மோதிவிட்டு அதிவேகமாக சென்ற காரை போலீசார் சினிமா பாணியில் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர். ஓட்டுநர் மதுபோதையில் காரை இயக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தோட்டத்து வீட்டில் மூதாட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அதைத் தடுக்க தவறிய திமுக அரசின் முகமூடி கிழிந்துள்ளது என அன்புமணி விமர்சித்துள்ளார்.
திருவண்ணாமலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் அண்ணாமலையாரை தரிசிக்க கொட்டும் மழையிலும் நீண்ட காத்திருந்த பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
சென்னையில் இருந்து துபாயிக்கு 326 பேருடன் புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் திடீரென இயந்திரக்கோளாறு காரணமாக ஒடுபாதைக்கு செல்லும் முன் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை, எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஆறுதல் அளித்தாலும் 'யார் அந்த சார்' என்ற கேள்வி இன்னமும் சோஷியல் மீடியாக்களில் எதிரொலித்துக்கொண்டே இருப்பது தி.மு.கவின் இமேஜை காலி செய்து வருகிறது. இந்த நிலையில், அமைச்சருடன் தொடர்பில் இருந்த வட்டச் செயலாளருக்கும் ஞானசேகரனுக்கு என்ன தொடர்பு, அமைச்சருக்கு அந்த வட்டச் செயலாளருக்கும் என்ன தொடர்பு? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொடுங்கையூரில் லிவிங் டூ கெதரில் இருந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. போதையில் இருந்த பெண்ணை தூக்க மாத்திரை கொடுத்து மசாஜ் செய்யும் போது கழுத்தை நெறித்து, முன்னாள் காதலரான மருத்துவர் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்தியாவில் 5 ரூபாய்க்கு கிடைக்கும் பார்லே ஜி பிஸ்கெட் பாக்கெட்டை, காசாவில் வசிப்பவர்கள் இரண்டாயிரத்து 400 ரூபாய்க்கு வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒருபுறம் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலாலும், மறுபுறம் பசி பட்டினியாலும் காசா மக்கள் செத்து மடியும் நிலையில், அங்குள்ள உணவு தட்டுப்பாடு, உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருவது உலகளவில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீன்பிடிதுறைமுகம் பகுதியில் பயணியிடம் செல்போன் பறித்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், செல்போன் மீட்கப்பட்டு, ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவைக்கு சென்றுள்ள இசைஞானி இளையராஜாவினை பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து உரையாடியுள்ளார். இதுத்தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அடையாரில் உள்ள தனுஷ் ஹேர் டிரஸ்ஸர்ஸ், கடந்த 10 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக முடிதிருத்தம் செய்து வருகிறது. இதுத்தொடர்பான வீடியோ இன்ஸ்டாவில் தற்போது வைரலாகி வருகிறது.