K U M U D A M   N E W S

தமிழ்நாடு

தேர்வுகளில் நல்ல தேர்ச்சி விகிதத்தை கொடுக்க வேண்டும் – ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தல்

அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என ஆசிரியர்கள் மத்தியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்-சென்னையில் அவசரமாக தரையிறக்கம்

விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரமாக கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்

மோடிக்கு எதிராக தவறான தகவலை பரப்புகிறார் - ராகுல் காந்தி மீது வானதி சீனிவாசன் சாடல்

வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான முக்கிய நடவடிக்கை ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் உள்ளது என கோவையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வருமான வரி பாக்கி - ஜெ.தீபா மனு தள்ளுபடி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், 36 கோடி ரூபாய் செலுத்தக்கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, அவரது சட்டப்பூர்வ வாரிசான தீபா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

விஜய் மக்கள் சந்திப்பு – தவெகவினருக்கு கட்சி தலைமை அறிவுறுத்தல்

விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், தவெக தொண்டர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை ஐகோர்ட் உட்பட 2 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீஸ் விசாரணை

சுங்க இல்லத்திற்கும் இமெயில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிஜிபி அலுவலகத்தில் புகார்

நடிகை விஜயலட்சுமி- சீமான் விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்பும் யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி டிஜிபி அலுவலகத்தில் புகார்

டெட் தேர்வு தொடர்பாக தீர்ப்பு: “யாரும் பயப்பட வேண்டாம்” – அமைச்சர் அன்பில் மகேஷ்

ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களை பாதுகாக்கிற பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

திமுகவினருக்கும், தவெகவினருக்கும் மோதல்- மாம்பாக்கத்தில் பரபரப்பு

வாடகைக்கு எடுத்த பந்தலுக்கு தவெகவினர் பணம் கேட்டதால் திமுகவினர் கத்தியால் வெட்டியதாக போலீசில் புகார்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு அக்.10ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த உதகை மகிளா நீதிமன்ற மாவட்ட நீதிபதி (பொறுப்பு) செந்தில்குமார் அடுத்த மாதம் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு

இன்ஸ்டா மூலம் பழகியவரை சந்திக்கச் சென்ற இளம்பெண் மர்ம மரணம்-போலீஸ் விசாரணை

இன்ஸ்டா மூலம் பழகிய திரைப்படத்துறையைச் சேர்ந்தவரை சந்திக்க சென்ற இளம்பெண் சந்தேக மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.200 கோடி வங்கி மோசடி வழக்கு-சென்னையில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை

பிரபல பெண் அரசியல்வாதியின் பினாமி நிறுவனம் என தகவல் வெளியாகி உள்ளது

தங்கக் கடத்தல் கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு!

பல கோடி மதிப்புள்ள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய தனது மகன் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி தாய் தொடர்ந்த வழக்கில், ராமநாதபுரம் போலீசாரின் விசாரணை திருப்தி அளிக்கவில்லையென அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

சென்னை விமான சேவை பாதிப்பு: திடீர் சூறைக்காற்று மழையால் 24 விமானங்கள் தாமதம்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென பலத்த சூறைக்காற்று மழை பெய்ததால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டம் வேண்டும்: திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம்!

பழைய ஓய்வூதியத் திட்டம், காலியிடங்களை நிரப்புதல், அடிக்கடி தேர்வு நடத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்து.. போக்குவரத்து பாதிப்பு!

சென்னை, கத்திப்பாரா மேம்பாலத்தில் ஓட்டுநர் மயக்கமடைந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்புச் சுவரில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டி: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!

ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். 

சாலையை ஆக்கிரமித்து நெல் பயிரிட்ட விசிக பிரமுகர்கள்: பொதுமக்கள் ஆத்திரம் - மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்புப் புகார்!

60 ஆண்டுகளாகப் பயன்படுத்திய சாலையை மூடியதால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதார் அட்டைகளை ஒப்படைப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மறைந்த தலைவர்களைப் பலியாக்கக் கூடாது: எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எச்சரிக்கை!

மறைந்த தலைவர்களின் பெயர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி காட்டமாக அறிவுறுத்தியுள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: மத்திய அரசு அதிகாரி கைது!

காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில், கல்லூரி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, மத்திய வேளாண் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளிகளை விமானத்தில் சென்று கைது செய்யலாம்: தமிழக டிஜிபி சுற்றறிக்கை!

வழக்கு விசாரணை, குற்றவாளிகளைக் கைது செய்தல் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக, புலனாய்வு அதிகாரிகள் பிற மாநிலங்களுக்கு விமானத்தில் செல்லலாம் என தமிழக பொறுப்பு டிஜிபி ஜி. வெங்கடராமன் காவல்துறை அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழக அரசின் அரசாணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 45 லட்சம் மோசடி: ஒருவர் கைது!

மருத்துவத்துறை மற்றும் மின்சாரத்துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 45,41,000 மோசடி செய்த வழக்கில், பினகாஷ் எர்னஸ்ட் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவி வான்மதியைத் போலீசார் தேடி வருகின்றனர்.

ஆணவப் படுகொலை மிரட்டல்: காதல் ஜோடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம்!

வேறு சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டதால், குடும்பத்தினரால் ஆணவப் படுகொலை மிரட்டலுக்கு உள்ளான காதல் ஜோடி, உயிருக்குப் பயந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளது.

கர்ப்பிணி உட்பட 27 பேருக்கு நடுக்கம் ஏன்? - சீர்காழி அரசு மருத்துவமனை விளக்கம்

சீர்காழி மருத்துவமனையில் நடுக்கம் ஏற்பட்ட நோயாளிகள் அனைவருக்கும் உடல்நிலை சீராக இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட திமுக நிறைவேற்றவில்லை – அண்ணாமலை

சட்டசபையில் துறை வாரியாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், 256 அறிவிப்புகளை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அரசை அண்ணாமலை விமர்சித்துள்ளார்.