K U M U D A M   N E W S

பாஜக

"பாஜக-வுடன் மீண்டும் கூட்டணி" கும்பிடு போட்ட மாஜிக்கள்..! அதிமுக-வில் மேலும் ஒரு விரிசல்...?

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதியானதைத் தொடர்ந்து அதிமுகவிற்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், மாஜிக்கள் சிலர் அதிமுகவை விட்டு விலக உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நயினாருக்கு வாழ்த்து சொன்ன முதல்வர்...அமைச்சரின் பதிலால் சிரிப்பலை

நயினார் நாகேந்திரன் பல மொழி புலவராகி, பழமொழி பேசிக்கொண்டிருக்கிறார்.இதை பார்க்கும் போது மாநிலத்தலைவராக இருந்து தேசிய தலைவராக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்–பாஜக சார்பில் போலீசில் புகார்

பொன்முடி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

தேமுதிகவை கழற்றிவிட்ட அதிமுக? கமலாலயம் முன் நிற்கும் பிரேமலதா? கூட்டணிக்கு அடிபோடும் அண்ணியார்?

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரதமர் மோடியை புகழ்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இப்படி திடீரென பாஜகவோடு நட்பு பாராட்டுவது ஏன்? அதிமுக கைவிட்டதால் பாஜகவை நாடுகிறதா தேமுதிக? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும்-கனிமொழி எம்.பி.,

எனக்கு மத நம்பிக்கை கிடையாது. நான் கோவில் நிலத்தில் இடம் கேட்டால் கொடுக்க முடியுமா? வக்ஃபு போர்டில் எதற்கு இஸ்லாமியர் இல்லாத ஒருவரை நியமிப்போம் என்பது ஏற்புடையதல்ல.

வரும் தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்படும்–நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டில் நடைபெறுகிற மக்கள் விரோத ஆட்சி மாற்றப்பட்டு, என்.டி.ஏ. தலைமையில் புதிய ஆட்சி அமையவேண்டும். அனைவரும் ஆதரவு தரவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என நாயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

பிரதமர் மோடி, அமித்ஷா தமிழில் புத்தாண்டு வாழ்த்து

இந்தப் புத்தாண்டு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து

அதிமுக அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது – சசிகாந்த் செந்தில் எம்.பி.,

திருடர்களை நம்பி அதிமுக வீட்டை ஒப்படைத்து இருப்பதாகவும், பாஜக வளர்வதற்கு தமிழகத்தில் நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் செயலில் அதிமுக செயல்பட்டு இருப்பதாக சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

அமைச்சர் பொன்முடி பெண்களைப் பற்றி மிகத் தரக்குறைவாக பேசி சம்பவம் தொடர்பாக நாங்கள் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று பெண்களிடம் எடுத்துக் கூற உள்ளோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினுக்கு எதிரான வேட்பாளர்.. பாஜகவின் பக்கா ஸ்கெட்ச்? இதுதான் சரியான போட்டி!

தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், பதவி பறிக்கப்பட்டாலும் அண்ணாமலையை வைத்து அதிரடி காட்ட டெல்லி பாஜக ஒரு திட்டம் தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது. அத்திட்டம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

அதிமுக, பாஜக கூட்டணி நம்பிக்கை கூட்டணியாக இருக்கும் - த.மா.க தலைவர் ஜி.கே வாசன்

மாற்றம் உறுதி என மக்கள் தீர்மானித்து அதிமுக பாஜக கூட்டணி நம்பிக்கை கூட்டணியாக இருக்கும் - த.மா.க தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நேற்று (ஏப்.13) பதவியேற்ற நிலையில், முன்னாள் தலைவரின் டெல்லி பயணம் பாஜக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை 4 ஆண்டுகள் முதலமைச்சர் சீரழித்துள்ளார் - இபிஎஸ் விமர்சனம்

பாஜக பூச்சாண்டி காட்டியே, நான்கு ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னும் எத்தனை நாட்கள்தான் தமிழக மக்களை ஏமாற்ற முடியும்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

அதிமுக-பாஜக கூட்டணியால் திமுகவிற்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது- ஜி.கே.வாசன் விமர்சனம்

அதிமுகவும் பாஜகவும் கூட்டணியை உறுதிப்படுத்திய பிறகு திமுகவிற்கு தேர்தல் தோல்வி ஜுரம் ஏற்பட்டுவிட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.

அதிமுக மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காது- முதலமைச்சருக்கு இபிஎஸ் பதிலடி

"தொட்டுப் பார்- சீண்டிப் பார்" வீடியோ கூட வெளியிட முடியாத அளவிற்கு தொடை நடுங்கிக் கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

“பிளவுவாத பாஜக...மக்கள் விரோத திமுக”- தவெக தலைவர் விஜய் சாடல்

தி.மு.க.வை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில், தன்னுடைய பழைய பங்காளியான அ.இ.அ.தி.மு.க.வைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ.க. மீண்டும் கைப்பிடித்துள்ளது

அதிமுக மீது சவாரி செய்ய தான் பாஜக கூட்டணி அமைத்துள்ளது- திருமாவளவன்

கூட்டணி இல்லை என்றால், தமிழ்நாட்டில் பாஜக ஒரு சக்தியே இல்லை என்பதை மக்கள் உறுதிப்படுத்திவிடுவார்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ரெய்டுகளுக்கு பயந்து அதிமுகவை அடமானம் வைத்துவிட்டார்- இபிஎஸ்ஸை விமர்சித்த முதலமைச்சர்

இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அ.தி.மு.க.வை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடி உள்ளார்

இபிஎஸ் அமைத்த கூட்டணி…அதிமுக ஆனந்தத்தில் மிதக்கிறது - கே.டி.ராஜேந்திரபாலாஜி

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியை பார்த்து விழி பிதுங்கி பதறிப்போய் இருக்கிறது திமுக கூட்டம் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

நாடாளுமன்ற அவையில் பாஜக அரசு நாடகமாடுகிறது – ஆ.ராசா குற்றச்சாட்டு

மத்திய அரசு சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது என திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா குற்றச்சாட்டு

மீண்டும் N.D.A கூட்டணியில் அதிமுக- பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த இபிஎஸ்

குடும்ப அரசியல், ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் இல்லாத ஒரு சிறந்த தமிழ்நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

அண்ணாமலையின் நிறுவனத் திறன்களை பாஜக பயன்படுத்தும்- அமித்ஷா பதிவு

கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் நிறுவனத் திறன்களை பாஜக பயன்படுத்தும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவிட்டுள்ளார்.

கூட்டணி உறுதியான கையோடு அமித்ஷாவிற்கு ஸ்பெஷல் விருந்தளிக்கும் எடப்பாடி!

அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமித்ஷாவிற்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி–அமித்ஷா அறிவிப்பு

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பெயர் பலகையை அழித்தது யார்? குழு அமைத்து விசாரணை நடத்த பாஜக முடிவு

அண்ணாமலை பெயர் பலகை கருப்பு மை கொண்டு அழிக்கப்பட்ட சம்பவத்தில் குழு அமைத்து விசாரணை நடத்த பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.