திமுக பாதையில் விஜய்... உதயநிதிக்கு பயங்கர புரோமோஷன்... வெளுத்து வாங்கும் அர்ஜுன் சம்பத்!
உதயநிதியை ப்ரொமோட் செய்வதற்காக சீனியர் அமைச்சர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.
உதயநிதியை ப்ரொமோட் செய்வதற்காக சீனியர் அமைச்சர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.
மழை ஆரம்பித்து 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கால்கள் எங்கேயாவது தரையில் பட்டுள்ளதா? என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஆளுநரும் திமுகவும் ஒன்றாகி விட்டனர். தமிழக ஆளுநருடன் அனுசரித்து போகின்றோம் என பிரதமருடன் திமுக ஒப்பந்தம் போட்டுள்ளது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவிலே சில காலம் தங்கிவிடலாம் என்ற முடிவுக்கு அழகிரி குடும்பம் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
பலநூறு கோடிகளைக் கொட்டி கார் பந்தயம் நடத்தும் திமுக அரசிற்கு, அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தும் திறன் இல்லையா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்.
வரும் 27ம் தேதி தவெக மாநாடு நடைபெறவுள்ளதை அடுத்து, மூன்று சிறப்புக் குழுக்களை அமைத்து உத்தரவிட்டுள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய்.
தமிழக வெற்றிக் கழகம் மூலம் அரசியலில் தடம் பதிக்கவுள்ள விஜய்க்கு, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்துள்ளார்.
2026 தேர்தலின்போது திமுக கூட்டனி ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் திமுக கூட்டணி வெளு வெளுத்து போகும் என முன்னாள் ஆளுநர் தமிழசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் மிதக்கிறது மதுரை மற்றும் கோவை. அடுத்த சில நாட்களில் சென்னை மாநகரம் என்ன ஆகுமோ? இதுதான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக அரசுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்திருந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார் அமைச்சர் மதிவேந்தன்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பூங்காவிற்கு வருகை புரியும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
2024-ஆம் ஆண்டு நடந்து முடிந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப்-4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களை குறைந்தபட்சம் 15,000 ஆக அதிகரிக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
புயல் மழையே வந்தாலும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி கண்டிப்பாக நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இலங்கையுடன் பேசி தீர்வு காண வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை, சாதிவாரி கணக்கெடுப்பும், சமூகநீதியும் இல்லை, வாட்டி வதைக்கும் வரி, கட்டண உயர்வால் மக்கள் அவதி, மக்கள் விரோத திமுக அரசைக் கண்டித்து 3 நகரங்களில் பாமக பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
TN ALERT செயலி 24 மணி நேரமும் செயல்படும் என்பதால் பொதுமக்கள் எந்த நேரத்தில் புகார் அளித்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ப்ரோமோஷன் வேலைகளை கட்சியினர் தொடங்கியுள்ளனர்.
இன்று (அக். 11) ஆயுத பூஜையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தேரிவித்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத தவெக தலைவர் விஜய், இன்று (அக். 11) ஆயுத பூஜைக்கு வாழ்த்து தெரிவித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் திமுக சின்னம் பதித்த டி-சர்ட் அணிவதால் அதிமுகவினர் ஏன் பயப்படுகிறார்கள் என அமைச்சர் முத்துசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் ஆணைப்படி அறவழிப் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் வெற்றி என்பது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விஜய் அரசியலுக்கு வந்தாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை எங்க லைன் வேற.. அவரு லைன் வேற என தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தெரிவித்துள்ளார்.