K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தினை சார்ந்த 3 பேர் உயிரிழப்பு- முதல்வர் இரங்கல்

விருதுநகர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தினை சார்ந்த 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளியங்கால் ஓடையில் நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு..3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பிரியாணிக்கு பணம் கேட்ட கடை உரிமையாளருக்கு கன்னத்தில் ‘பளார்’...சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

காயமடைந்த முகமது நவ்ஷத் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

பாலியல் தொல்லை வழக்கு...கைதான மதபோதகர் ஜான் ஜெபராஜை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

மதபோதகர் ஜான் ஜெபராஜை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.இதற்காக விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்...குமரியில் 350 விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைப்பு

தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று நள்ளிரவு 12 மணி ஏப்ரல் 15-ந் தேதி முதல் வருகிற ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

போலீஸ் முன்னிலையில் அரிவாள் வெட்டு...மற்றொரு போலீஸ்காரரால் உயிர்தப்பிய நபர்

அரிவாளுடன் கொலை வெறி தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நடுரோட்டில் காவலர் மீது தாக்குதல்... திமுக பிரமுகர்களால் பரபரப்பு

மதுபோதையில் இருந்த திமுகவைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் காவலர் காமராஜை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

5 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை

அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.

மீண்டும் இபிஎஸ் பெயரை தவிர்த்த கே.ஏ.செங்கோட்டையன்...கோபியில் நடந்த நிகழ்ச்சியில் பரபரப்பு

நமது பகுதி மேன்மேலும் வளர வேண்டும் என்ற வாழ்த்துகளையும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் சிறந்த முறையில் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் முனைப்பாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

சிறுவர்களால் விபத்துகள் அதிகரிப்பு...முதியவர்களுக்கு சென்னையில் அடுத்தடுத்து நிகழ்ந்த சோகம்

சென்னையில் கடந்த வாரம் சிறுவன் இயக்கிய கார் மோதி முதியவர் உயிரிழந்த நிலையில், தற்போது 16 சிறுவன் பைக் ஓட்டி முதியவர் மீது மோதியதில் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளில் அதிகாரத்தை கொடுத்ததுதான் திராவிட இயக்கம் ஏற்படுத்திய மாற்றம்

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும்-கனிமொழி எம்.பி.,

எனக்கு மத நம்பிக்கை கிடையாது. நான் கோவில் நிலத்தில் இடம் கேட்டால் கொடுக்க முடியுமா? வக்ஃபு போர்டில் எதற்கு இஸ்லாமியர் இல்லாத ஒருவரை நியமிப்போம் என்பது ஏற்புடையதல்ல.

அம்பேத்கர் சிலைக்கு விஜய் மரியாதை

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

“வழிப்போக்கர் போல சண்டையிடுகிறார்” – முதலமைச்சரை சாடிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

திமுக மூழ்கும் கப்பலாக உள்ளதால் மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். மூழ்கும் கப்பலில் இருந்து தப்பி அதிமுக என்ற சிறந்த கப்பலில் பயணிக்க வேண்டும்,

மறுமணம் செய்வதாக முதியவரிடம் மோசடி- 2வது கணவரால் சிக்கிய ‘ரொமாண்டிக்’ பெண்

செய்திதாள்களில் மறுமணம் செய்ய விரும்பும் வயதான ஆண்கள் அளிக்கும் விளம்பரங்களை பார்த்து அவர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபடுவதாக கைதான கீதா வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

அமைச்சர் பொன்முடி பெண்களைப் பற்றி மிகத் தரக்குறைவாக பேசி சம்பவம் தொடர்பாக நாங்கள் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று பெண்களிடம் எடுத்துக் கூற உள்ளோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர் விடுமுறை எதிரொலி...கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்!

கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், சுற்றுலா தலங்களிலும், நகர்ப்பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவு!

கோவையில் ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் வரிச்சியூர் செல்வத்தை கைது செய்யவும், தேவைப்பட்டால் காலில் சுட்டு பிடிக்க காவல் துறையினருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோயில் வளாகத்தில் வணிக வளாகம் - நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில், வணிக வளாகம் கட்ட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது!

கோவையில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஜான் ஜெபராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

“பிளவுவாத பாஜக...மக்கள் விரோத திமுக”- தவெக தலைவர் விஜய் சாடல்

தி.மு.க.வை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில், தன்னுடைய பழைய பங்காளியான அ.இ.அ.தி.மு.க.வைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ.க. மீண்டும் கைப்பிடித்துள்ளது

அதிமுக மீது சவாரி செய்ய தான் பாஜக கூட்டணி அமைத்துள்ளது- திருமாவளவன்

கூட்டணி இல்லை என்றால், தமிழ்நாட்டில் பாஜக ஒரு சக்தியே இல்லை என்பதை மக்கள் உறுதிப்படுத்திவிடுவார்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பொன்முடி சர்ச்சை பேச்சு: அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஒரு மனிதனின் மனதில் இருக்கவே கூடாத குரூர வக்கிரத்தின் உச்சம், அமைச்சர் பொன்முடியின் பேச்சில் வெளிப்பட்டிருக்கிறது என இபிஎஸ் கண்டனம்

தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கனமழை...எங்கெல்லாம் தெரியுமா?

இடி மின்னலுடன் கூடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது

சென்னையில் நள்ளிரவில் மின்வெட்டு...ஆயிரக்கணக்கான மக்கள் கடும் அவதி

கோயம்பேட்டில் இருந்து மதுரவாயலுக்கு வரும் 33 கிலோ வாட் உயிர் அழுத்த கேபிளில் ஏற்பட்ட பழுதால் மின்வெட்டு