K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

இதுக்கு ஒரு எண்டே இல்லையா? சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவரால் ஆபத்து.. வழக்கறிஞர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநில தலைவர் ஆனந்தனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக வழக்கறிஞர் வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வக்ஃபு திருத்த சட்டம் - உச்சநீதிமன்றத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

4 மாதத்தில் 3628 கிலோ கஞ்சா அழிப்பு.. போலீசாரின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

நடப்பு ஆண்டில் இதுவரை தமிழகத்தில் சிக்கிய 3628 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டுள்ளதாக மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதிமுக உட்கட்சி விவகாரம்.. விசாரணையை தொடரும் தேர்தல் ஆணையம்!

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு அனுப்பியுள்ளதாக அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தொடரும் சைபர் கிரைம் மோசடி.. போலி ஆன்லைன் ரூ.90 லட்சம் திருடிய 2 பேர் கைது!

போலி ஆன்லைன் வர்த்தக முதலீட்டு மூலம் ரூ. 90 லட்சத்தை திருடிய 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மோசடி கும்பல் திருடிய பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றியது விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

அமைச்சரின் சர்ச்சை பேச்சு.. டிஜிபி விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என மாலை 4. 45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலைஞர் நினைவிடத்தில் கோயில் கோபுரம்.. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் கோயில் கோபுரம் போல் பூ அலங்காரம் செய்திருப்பதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

போலீஸ் ஸ்டேஷன் வாசலில் கெத்தாக ரீல்ஸ்... வருத்தம் தெரிவித்த இளைஞர்கள்

அபராதம் கட்ட சென்று, போலீஸ் ஸ்டேஷன் வாசலில் கெத்தா ரீல்ஸ் வெளிட்ட இளைஞர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த குணால் கம்ரா.. வழக்கை முடித்து வைத்த சென்னை நீதிமன்றம்

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா, மும்பை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம் பெற்றுள்ளதால் அவரது முன்ஜாமின் மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டுக்கட்டாக சிக்கிய பணம்...ஹவாலா கும்பல் குறித்து விசாரணை

கடந்த சில தினங்களுக்கு முன்பு ரயிலில் கடத்தப்பட்ட ரூ.44 லட்சம் மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது காரில் கடத்தப்பட்ட ஹவாலா பணம் ரூ.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருடியதாக கூறி விசாரணை.. கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

கோவை தனியார் கல்லூரியில் பி.எஸ்சி படித்து வந்த அனுபிரியா என்ற மாணவி, கல்லூரியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் என கூறி முதியவரிடம் அராஜகம்...திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

திமுக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு....சிறப்பு நீதிமன்றம் போட்ட உத்தரவு

அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலியான ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்கு தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மே 6ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Gold price today: தலையில் பேரிடியாய் விழுந்த தங்கம் விலை.. புலம்பும் மக்கள்

தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருவதால் நகைப்பிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

“செர்பியாவில் சரியாக உணவு கிடைக்கவில்லை”- போட்டியில் பதங்கம் வென்று நாடு திரும்பிய வீரர்கள் ஆதங்கம்

பள்ளிகளுக்கு இடையிலான ஒலிம்பிக் போட்டி என்று அழைக்கப்படும் ஐஎஸ்எப் வேர்ல்ட் ஸ்கூல் கேம்ஸ் போட்டியில் வாக்குவாண்டா தற்காப்பு கலையில் மொத்தம் 6 வெள்ளி பதக்கம் வென்று தமிழக மாணவ, மாணவிகள் அசத்தல்

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

கரூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டுகளும், 4 பேருக்கு 3 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

பாலியல் தொல்லை வழக்கு...மதபோதகர் ஜான் ஜெபராஜின் உறவினரும் கைது

சிறுமிகள் இருவரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெனட் ஹரிஸ் கைது செய்யப்பட்டு உள்ளார் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்...ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை அபகரித்து அட்டூழியம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தியால் தாக்கியதில் மீனவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

நெல்லையில் பயங்கரம்: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல்.. நடந்தது என்ன?

சாதிய பாகுபாடு காரணமாக சக மாணவர்களால் தாக்கப்பட்ட சின்னத்துரை மீது 5 பேர் கொண்ட கும்பல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் வங்கி மோசடி... 2 ஆண்டுகளில் 40 வழக்குகள்.. காவல்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!

2 ஆண்டுகளில் வங்கி மோசடியில் ஈடுபட்டதாக 40 வழக்குகளில் 205 பேரை கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த பணத்தை விரைந்து வழங்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கு.. திரும்ப பெற்ற எடப்பாடி பழனிசாமி!

அதிமுகவின் கருப்பு, வெள்ளை கொடி, பெயர், ஜெயலலிதாவின் பெயர், புகைப்படம் ஆகியவை பயன்படுத்த டி.டி.வி தினகரனுக்கு தடை விதிக்க கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக தாக்கல் செய்த மனுவை எடப்பாடி பழனிச்சாமி திரும்ப பெற்றுக் கொண்டார். வழக்கு வாபஸ் பெற்றதை அடுத்து டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கிய மாணவி சடலம்..போலீசார் விசாரணை!

சென்னை மெரினா கடற்கரையில், சரியாக தேர்வு எழுதாததால் வீட்டை விட்டு வெளியேறிய 12-ம் வகுப்பு மாணவி, கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் - மதுரை ஆதினம்

வன்முறை, சண்டை காட்சிகள் குறித்து வரும் திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழ் சினிமாவை அரசு வரைமுறை செய்ய வேண்டும் மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.