K U M U D A M   N E W S
Promotional Banner

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஒருவர் தான் குற்றவாளி- அரசு தரப்பு வழக்கறிஞர்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் தான் குற்றவாளி, வேறு ஒரு நபர் உள்ளார் என்று பேசினால், அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறும் என அரசு தரப்பு வழக்கறிஞர் பேட்டி

ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை –சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு- ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்களை மகளிர் நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது.

சீட் கொடுக்காத அதிமுக..! க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக..! கூட்டணியை மாற்றும் தேமுதிக?

மாநிலங்களவை சீட் கொடுக்காத நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, திமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தேமுதிக-விற்கு சீட் இல்லை..! 2 சீட்டையும் தூக்கிய அதிமுக..! எடப்பாடி போடும் கணக்கு என்ன?

அதிமுக வசமுள்ள இரண்டு ராஜ்யசபா சீட் யாருக்கு என்பதில் இழுபறி நீடித்த நிலையில், இரண்டையும் நாங்களே எடுத்துக் கொள்கிறோம் என்று கூறி கூட்டணிக்கு கல்தா கொடுத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு ராஜ்யசபா சீட்டும் அதிமுக எடுத்துக் கொண்டுள்ளதால், தேமுதிகவின் நிலை என்ன? விரைவில் தெரியவரும்.

மனிதனின் நுண்ணறிவை விட செயற்கை நுண்ணறிவு ஒருபோதும் பெரியதல்ல - ஸ்ரீதர் வேம்பு

மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மனிதனின் நுண்ணறிவை விட ஒருபோதும் பெரியதல்ல என்று ஜோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

மதுரையில் தொடங்கியது திமுக பொதுக்குழு – உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு?

இன்றைய பொதுக்குழு வரவிருக்கும் சட்டமன்றத்தேர்தலை நோக்கி திமுகவின் நகர்வை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான கட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து...திருமங்கலத்தில் பரபரப்பு

திருமங்கலம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையில் கொரோனா பரவல் இல்லை - கல்லூரி முதல்வர் நிர்மலா விளக்கம்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனோ பரவல் இல்லை என்றும், கட்டாய முக கவசம் என தவறான செய்தி குறித்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் நிர்மலா விளக்கம் அளித்துள்ளார்.

பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்

பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சத்தை வங்கி கணக்கில் தமிழக அரசு வரவு வைத்துள்ளது.

தீர்ப்பு ஒகே.. யார் அந்த சாருக்கு பதில் எங்கே? EPS சூளுரை

”அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் மூலக் கேள்வியான யார் அந்த சாருக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சி அமையும் போது அந்த SIR "யாராக இருந்தாலும்", கூண்டேற்றட்டப்படுவார்” என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

வயதான தாய்.. பெண் குழந்தை.. நீதிபதியிடம் மன்றாடிய குற்றவாளி ஞானசேகரன்

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கான தண்டனை விவரம் ஜூன் 2-ஆம் தேதி வழங்கபடும் என மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலெட்சுமி அறிவித்துள்ளார்.

FIR லீக்.. திமுக முகம்.. அண்ணா பல்கலை., பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு!

தமிழகத்தை உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

த்ரில்லர் கதைக்களத்தோடு மே 30-ல் வெளியாகும் “மனிதர்கள்” திரைப்படம்!

திரில்லர் கதைக்களத்தில் உருவான மனிதர்கள் திரைப்படம் மே 30 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆப்ரேஷன் சிந்தூர்: புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது- பிரதமர் மோடி

உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கு - மே.28-ல் தீர்ப்பு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மே 28ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கில் மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளிக்கிறார்.

ஐ.ஆர்.எஸ் To அரசியல்: தமிழ்நாட்டில் மாற்றத்தை உருவாக்கப்போகிறாரா அருண்ராஜ்!

மத்திய அரசின் வேலையை வேண்டாம் என்று உதறிவிட்டு ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண்ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சேகர் ரெட்டியை கதறவிட்ட ஐ.ஆர்.எஸ் அதிகாரி திராவிட கட்சிகளுக்கு என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

தூக்கமில்லை..மன உளைச்சல்.. மனமுடைந்து பேசிய அன்புமணி ராமதாஸ்

”என்னைப் பொறுத்தவரை நான் என்ன தப்பு பண்ணேனு எனக்கு தெரியல. எதனால் என்னை பதவியிலிருந்து நீக்கினார்கள்” என அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மத்தியில் மனமுடைந்து பேசியுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணிக்கு புது கேப்டன்.. கழட்டிவிடப்பட்ட முகமது ஷமி

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் அணியினை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய டெஸ்ட் அணிக்கு புது கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

காஸாவின் குழந்தைகள் கூட எதிரிகள்தான் - இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேச்சு

காஸாவின் குழந்தைகள்கூட எதிரிகள்தான், காஸாவில் ஒரு குழந்தை கூட இருக்கக்கூடாது என்று இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மோஷே ஃபெயிக்லின் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருப்பது, உலக நாடுகளுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம்!

கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாடிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரூ.10,000 அபராதமும், கோவை வடக்கு தாலுகா தாசில்தார் மணிவேலுக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல் மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் துறை தலைவர் பணியிடமாற்றம் - மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு

சென்னை பல் மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் துறை தலைவர் இருளாண்டி பொன்னையா, புதுக்கோட்டை அரசு பல் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்து, மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக உரிமை விவகாரத்தில் முதலமைச்சர் சமரசம் செய்யமட்டார்- அமைச்சர் மனோ தங்கராஜ்

எப்போதும் நிரந்தரமான விலையை தரும் ஆவினுக்கு அனைத்து விவசாயிகளும் வர வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டியளித்துள்ளார்.

ED விசாரணைக்கு தடை- டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி அமலாக்கத்துறை விசாரிக்க முடியும் என உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

ஆகாஷ் பாஸ்கரனுக்கு ED சம்மன்... ‘பராசக்தி’ படத்திற்கு சிக்கலா?

இன்று ஆஜராகும்படி ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அளிக்கப்பட்ட நிலையில் ஆகாஷ் பாஸ்கர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.