K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

வேலை வாங்கி தருவதாக கூறி 1.65 கோடி மோசடி.. தலைமறைவாக இருந்தவர் கைது!

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 1.65 கோடி ஏமாற்ற விட்டு தலைமறைவாக இருந்தவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை உயர்த்த முடிவு? கருத்து கேட்கும் தமிழக அரசு

தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கினைத் தொடர்ந்து ஆண்டுதோறும் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்க குழு அமைத்துள்ளது தமிழக அரசு.

பாலம் கட்டும் பணியால் பாதிப்பு: 141 மரங்களுக்கு மறுவாழ்வளிக்கும் முயற்சி தீவிரம்

தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெட்ட கணக்கெடுக்கப்பட்ட 141 மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படுகிறது. இதற்காக மரங்கள் வேரோடு பிடுங்கிவேறு இடத்தில் நடும் பணி தொடங்கி உள்ளது.

பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்

பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சத்தை வங்கி கணக்கில் தமிழக அரசு வரவு வைத்துள்ளது.

சோளிங்கரில் 10ம் வகுப்பு மாணவி குத்திக்கொலை-படுகாயத்துடன் மற்றொரு மாணவி அனுமதி

சோளிங்கரில் வீட்டில் இருந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூத்த மொழி தமிழ் தான்- அன்புமணி ராமதாஸ்

மூத்த மொழி அன்னை தமிழ் தான். தமிழில் இருந்தும் தான் பிற திராவிட மொழிகள் பிறந்தன என்பது மொழி ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு தீர்ப்பு நீதியாக இருக்க வேண்டும் – சீமான்

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கும் அதே நேரத்தில் ஆடு, மாடுகள் மாநாடு வைத்திருக்கிறேன் அதில் கலந்து கொள்வேன் சீமான் பேட்டி

சென்னை மெரினாவில் ரோப் கார் வசதி....மேயர் கொடுத்த அப்டேட்

சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் வசதி குறித்து சாத்தியக்கூறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என சென்னை மேயர் பிரியா விளக்கம்

ஐடி ஊழியரின் திருமணத்தை நிறுத்திய ஆசிரியை...ஷாக்கான பெண் வீட்டார்

பெண் ஆசிரியை அழைத்து வந்த வழக்கறிஞர்களை பார்த்து பெண் வீட்டார்கள் உங்களை எங்கள் குலதெய்வம் தான் அனுப்பி வைத்து என் மகள் வாழ்க்கையை காப்பாற்றி இருக்கிறது என கண்ணீர் மல்க பேசினர்

தீர்ப்பு ஒகே.. யார் அந்த சாருக்கு பதில் எங்கே? EPS சூளுரை

”அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் மூலக் கேள்வியான யார் அந்த சாருக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சி அமையும் போது அந்த SIR "யாராக இருந்தாலும்", கூண்டேற்றட்டப்படுவார்” என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

வயதான தாய்.. பெண் குழந்தை.. நீதிபதியிடம் மன்றாடிய குற்றவாளி ஞானசேகரன்

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கான தண்டனை விவரம் ஜூன் 2-ஆம் தேதி வழங்கபடும் என மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலெட்சுமி அறிவித்துள்ளார்.

FIR லீக்.. திமுக முகம்.. அண்ணா பல்கலை., பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு!

தமிழகத்தை உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

தீ விபத்து சம்பவம்.. தவெகவினரை போலீசார் தாக்கவில்லை என விளக்கம்!

தீ விபத்தால் வீடுகளை இழந்த பொதுமக்களுக்கு உதவிகளை வழங்கிய தவெக பெண் நிர்வாகியை ஷூவால் எட்டி உதைத்ததாக குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதுபோல எதுவும் நடக்கவில்லை என போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், இது தொடர்பாக விரிவாக விசாரணை மேற்கொள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

விமான பயணியிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல்.. கோவை விமான நிலையத்தில் பரபரப்பு!

கோவை விமான நிலையத்தில் ஒரு பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை: பாஜகவினர் கொட்டும் மழையில் பேரணி!

ஆப்ரேஷன் சிந்தூர் போர் வெற்றியை கொண்டாடும் வகையில் போரில் ஈடுபட்ட ராணுவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் நடிகை நமீதா கொட்டும் மழையில் தேசிய கொடியை ஏந்தி பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர்.

செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு.. நாக்பூரில் அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி விசாரணை..!

இந்தியாவில் இருந்து துபாய்க்கு செம்மரக்கட்டைகளை கடத்தும் முக்கிய நபரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர்.

மதுபோதையில் டீக்கடையில் ரகளை.. 5 சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது!

மதுபோதையில் டீக்கடையில் புகுந்து மூன்று பேரை அடித்து ரகளையில் ஈடுபட்ட 5 சிறார்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட்.. 4வது நாளாக கடலுக்கு செல்லாத நாட்டு படகு மீனவர்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால், நாட்டு படகு மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தவெக பெண் நிர்வாகி மீது காவல்துறை தாக்குதல்.. தமிழ்நாடு முஸ்லிம் லீக் கண்டனம்!

தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகி மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிகனமழையினால் நீலகிரியில் ரெட் அலர்ட்.. சுற்றுலாத்தலங்கள் மூடல்..!

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத்தலங்கள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

துணை நடிகையுடன் சல்லாபம்.. கம்பி நீட்டிய கனடா என்ஜினீயருக்கு போலீசார் வலை

திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவு வைத்து கொண்டு ஏமாற்றி விட்டதாக துணை நடிகை அளித்த புகாரை தொடர்ந்து கனடா நாட்டு சாப்ட்வேர் என்ஜினீயர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நுங்கு சாப்பிட அழைத்த சிறுவர்கள்.. டக்கென்று காரை நிறுத்திய முன்னாள் அமைச்சர்

’சார் வாங்க சார்.. நுங்கு சாப்பிட்டு போலாம்’, என அன்போடு சிறுவர்கள் அழைத்ததும், உடனே வாகனத்தை நிறுத்தி நுங்கு சாப்பிட்டுவிட்டு பொதுமக்களுக்கும் வாங்கி கொடுத்த முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கரின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோடை மழை பாதிப்புகளை எதிர்கொள்ள மின்துறை தயாராக உள்ளது – அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாட்டில் கோடை மழையால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள மின்துறை தயாராக உள்ளது அரியலூரில் புதிய வழித்தடங்களில் மகளிர் கட்டணமில்லா பயணப் பேருந்துகளை தொடங்கி வைத்த பிறகு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

’கும்பலாக சுத்துவோம்.. அய்யோ அம்மான்னு கத்தவோம்’.. ரேசில் ஈடுபட்ட இளசுகள் அதிரடி காட்டிய போலீஸ்

அண்ணாநகரில் இருந்து கும்பலாக அதிவேகமாக வாகனத்தை இயக்கிய விவகாரத்தில் பத்து இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ஒன்பது இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வார இறுதியில், அதிவேகமாக வாகனத்தை இயக்கி ரீல்ஸ் வெளியிட ஓட்டியதாக இளைஞர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

81 வயது மூதாட்டியை தங்க நகைக்காக கழுத்தை நெரித்த பெண்.. மயிலாப்பூரில் அதிர்ச்சி

சென்னை மயிலாப்பூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த 81 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்து தங்க நகைகள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து அக்கம்பக்கத்தினர் போலீசில் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.