ஆக. 21-ல் மதுரையில் தவெக மாநாடு நடைபெறும் - விஜய் அதிகாரபூர்வ அறிவிப்பு
காவல் துறையின் அறிவுறுத்தலை ஏற்று மாநாடு ஆக.21ல் நடத்தப்படும் என விஜய் அறிவிப்பு
காவல் துறையின் அறிவுறுத்தலை ஏற்று மாநாடு ஆக.21ல் நடத்தப்படும் என விஜய் அறிவிப்பு
எதிர்கட்சிகளின் தொடர் அமளிகளுக்குப்பிறகு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஜூலை 25 ) மாநிலங்களவையில் எம்.பி.யாக கமல்ஹாசன் எனும் நான் என்று தமிழில் பதவியேற்றுக் கொண்டார். திமுக கூட்டணியில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநிலத்தின் தெருக்களில் யாசகம் பெறும் குழந்தைகளுக்கும் அவர்களுடன் உள்ள பெரியவர்களுக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. யாசகம் செய்வோர் உண்மையிலேயே குழந்தையின் ரத்த உறவா என அறியவே சோதனையெனத் தகவல் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும், தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்றும், அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என்ன சொல்கிறார்களோ அதன் படி கேட்போம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பீகாரில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் பதவியேற்கவுள்ள நிலையில், சகோதரத்துவம் போற்றும் சகலகலாவல்லவன் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு எம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பதிவான 1,301 இணைய மோசடி வழக்குகளில் ரூ.107 கோடி பாதிக்கப்பட்டவர்கள் இழந்துள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.
மாநில உரிமைக்கு குரல் கொடுத்தால் ஆன்ட்டி நக்சலைட்டுகள் என மத்திய அரசு அவர்களை அச்சுறுத்துகிறது என திருச்சியில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கு தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடத்தை ஒழிப்போம் என்று அண்ணா, பெரியார் படங்களுடன் வீடியோ வெளியானது குறித்து நான் இன்னும் பார்க்கவில்லை, அதனை பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 12-ந் தேதியாகும். அன்றைய தினம் களத்தில் உள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.
மாநிலங்களவை தேர்தலுக்கு கமல்ஹாசன் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், அவரின் சொத்துமதிப்பு விவரங்கள் இணையத்தில் பேசுப்பொருளாகி உள்ளது. அவர் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு விவரங்களை இப்பகுதியில் காணலாம்.
மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா்.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே நேரத்தில், திமுக வேட்பாளர்களும் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்வார்கள என்று தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
மாநிலங்களவை சீட் கொடுக்காத நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, திமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து நக்சல்களை ஒழிக்கிறோம் என்கிற பெயரில் பழங்குடி மக்களை வேட்டையாடும் நடவடிக்கையை கண்டித்து நாளை சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாக மாமல்லபுரத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கொலை வழக்கு குறித்து வழக்கு பதிவு செய்த மகுடஞ்சாவடி போலீசார் வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் 5 பேரை கைது செய்தனர்
கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்த ஆந்திர மாநில பக்தர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் நிதிப் பகிர்வு குறித்துப் பரிந்துரைகளை வழங்குவதற்காக 7-வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் அசாம் மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதியினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானுடனான போர் சூழலில் மர்ம நபர் தொடர்பு கொண்டு கப்பல் படையில் விவரங்கள் கேட்டதால், அவர் மீது புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.