#BREAKING || நினைத்தது கிடைத்தது.. கொண்டாடும் தவெக தொண்டர்கள்!
TVK Party: தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதை தொடர்ந்து தவெக தொண்டர்கள் கொண்டாட்டம்.
TVK Party: தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதை தொடர்ந்து தவெக தொண்டர்கள் கொண்டாட்டம்.
தமிழக வெற்றிக் கழகத்தை தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியாக அங்கீகரித்துள்ளதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அதேநேரம் மாநாடு குறித்து எந்த அப்டேட்டும் கொடுக்காதது தவெக தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamilisai Soundarrajan on Mahavishnu Issue: அரசு பள்ளியில் மத சொற்பொழிவாற்றிய மகாவிஷ்ணு சர்ச்சை தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷிற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி.
எல்லா பண்டிகைகளுக்கும் முதல் ஆளாக வாழ்த்துச் சொல்லும் நடிகரும் தவெக தலைவருமான விஜய், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது குறித்து சர்ச்சையை கிளப்பியுள்ளது பாஜக.
''அரச நிர்வாகத்தில் எத்தகைய தவறு நிகழ்ந்தாலும் அரசும், தொடர்புடைய அமைச்சகமும் தங்களைத் தற்காத்துக்கொள்ள முனையாமல் தவறுக்கான முழுப்பொறுப்பையும் ஏற்று, மக்களிடம் மன்னிப்புக்கோருவதோடு, இனி அத்தவறுகள் நிகழாது என உறுதியளித்து அதன்படி செயல்படுவதுதானே ஒரு நல்ல அரசின் நேர்மையான நிர்வாக நடைமுறையாக இருக்க முடியும்?'' என்று சீமான் கூறியுள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சியை ஆங்கிலேயர்கள் மற்றும் கிறிஸ்தவ மத போதகர்கள் திட்டமிட்டு அழிக்க முயன்றதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக வெற்றி கழக மாநாட்டின் முக்கிய அறிவிப்பை நாளை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
RS Bharathi : மணிப்பூர் உத்திரபிரதேசம் குஜராத் மாநிலத்தில் உள்ள சம்பவங்களை விட, தமிழகத்தில் பெரிதாக ஒன்று குற்றசம்பவங்கள் நடக்கவில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
''பள்ளிக்கல்வித்துறை அனுமதி கொடுக்காமல் நிகழ்ச்சி நடந்ததா? பள்ளிக்கல்வித்துறை, தலைமை ஆசிரியரை பலி ஆடாக ஆக்குவதற்கு பதிலாக அமைச்சர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்வது பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல'' என்று தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
''ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இனி எப்போதும் வழங்கப்படாது. 'சட்டப்பிரிவு 370'ஐ மீண்டும் கொண்டு வர நாங்கள் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டோம். ஏனெனில் சிறப்பு அந்தஸ்து ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் கைகளில் கற்கள், ஆயுதங்கள் கொடுத்து அவர்களை வன்முறைக்கு இழுத்துச் சென்றது'' என்று அமித்ஷா கூறியுள்ளார்.
வக்பு வாரிய சட்ட திருத்தம் கண்டிப்பாக நிறைவேறும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவற்றை புறந்தள்ள வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங். எம்பி மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதை எதிர்த்து விஜயபிரபாகரன் தொடர்ந்த வழக்கில், மாணிக்கம் தாகூர் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Senthilbalaji Bail Issues: செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் என்ன சிக்கல்? திமுக அவரை கைவிட்டுவிட்டதா? கடைசிவரை அவர் சிறைவாழ்க்கைத்தான் வாழ வேண்டுமா? என்பது குறித்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆலோசகராக பணியாற்றிய கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
TVK Conference: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விரைவில் நடைபெற உள்ள நிலையில், கட்சியில் வலிமையான இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கணக்கு போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.
ADMK Ex Minister Jayakumar First Exclusive Interview : குமுதம் செய்திகளுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் தலைமை செய்தியாளர் சிவா நடத்திய சிறப்பு நேர்காணல்.
TVKவில் இணையும் முக்கிய தலைகள்.. விஜய்யின் ஆலோசகருக்கு டிமாண்ட்!
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருந்த ஷோபா கரந்தலஜே மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல்.
காவிரியின் குறுக்கே அணை கட்டுவோம் என்று வாரத்துக்கு ஒரு முறை தவறாமல் கூறி வரும் டி.கே.சிவக்குமார், இன்று சென்னையிலும் அதே கருத்தை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேகதாது அணை கட்ட வேண்டும் என்பதில் கர்நாடகாவின் முந்தைய பாஜக அரசும் சரி, இப்போதைய காங்கிரஸ் அரசும் சரி எந்தவித கருத்து வேறுபாடு இன்றி தெளிவாக உள்ளது
சீமான் மீது வன்கொடுமை சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று பட்டாபிராம் போலீசாருக்கு எஸ்.சி-எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.
Sellurraju vs Saravanan: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் மாவட்டச் செயலாளர் பதவிக்கு டாக்டர் சரவணன் குறிவைத்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவலால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Selvaperunthagai vs Alagiri: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர்கள் கட்சியின் முக்கிய பதவிகளில் ஆதிக்கம் செலுத்துவதாகக் அரசியல் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை, திருச்சி NIT-ல் மாணவிக்கு பாலியல் தொல்லை உள்ளிட்ட சம்பவங்களால் தொடரும் பதற்றம்.
வளர்ச்சிக்கும் நிதி இல்லை, வறட்சிக்கும் நிதி இல்லை. மத்திய அரசு வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.