K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை - ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. அதே நேரத்தில், கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. நீட் தேர்வு பிரச்சினையை பொறுத்தவரை, திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிக்கு சம்பந்தம் இல்லை - டி.ஆர். பாலு எம்.பி. பேச்சு

கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்றும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மகா புத்திசாலி அவரது பேச்சுக்கெல்லாம் பதில் சொல்லும் அளவிற்கு இல்லை, நாங்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல்!

எம்புரான் திரைப்படத்தை வெளியிட்ட கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். தொடர்ந்து, மலையாள நடிகர் பிருத்விராஜ் எம்புரான் படத்திற்க்கு முன் நடித்த சில படங்களில் பெற்ற வருமானங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

கனிமவள முறைகேடு: தமிழகத்தில் 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

கனிமவள முறைகேடு தொடர்பாக தமிழகத்தில் 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். ரூ. 5832 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

“கூடா நட்பு கேடாய் முடியும்” –விருதுநகரில் பாஜக போஸ்டரால் பரபரப்பு

கூடா நட்பு கேடாய் முடியும்.. வேண்டும் மீண்டும் அண்ணாமலை.. என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை பாஜக நிர்வாகி ஒட்டியுள்ளதால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு...9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு தரப்பு சாட்சி விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்...குவிந்த பக்தர்கள்

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாளிலேயே ஏராளமான பக்தர்கள் கங்கை மற்றும் காவிரியில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டுவந்து மூலவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

பிரதமர் மோடி பாம்பன் வருகை... ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு

பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகை தர உள்ளார்.

புதுக்கோட்டையில் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை-டாஸ்மாக்கை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு

கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, டாஸ்மாக் கடையையும் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு

அம்மன் சிலையில் பால் வடிந்ததால் பரபரப்பு...தீயாய் பரவிய தகவலால் குவிந்த பக்தர்கள்

கோவிலில் ஏராளமான பெண்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டுச் சென்றனர்

சென்னையில் பெண்ணிடம் அத்துமீறல்...குழந்தையை கடத்த முயன்றவரை விரட்டி பிடித்த வீடியோ வைரல்

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் குழந்தையை கடத்த முயன்ற திருடனை பொதுமக்கள் விரட்டிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வனப்பகுதியில் அன்னிய மரங்களை அகற்ற நவீன இயந்திரங்கள் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

தமிழக வனப்பகுதிகளில் அன்னிய மரங்களை அகற்ற நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதற்கு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

கார் பார்கிங் விவகாரம்.. தர்ஷன் மற்றும் லோகேஷ் இருவருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

கார் பார்க்கிங் விவகாரத்தில், நீதிபதியின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது உறவினர் லோகேஷ் ஆகிய 2 பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தர்பூசணி சாப்பிடலாமா? வேண்டாமா..? திடீரென கிளம்பிய சர்ச்சை.. வேதனையில் விவசாயிகள்!

பேய் இருக்கா இல்லையா என்ற சந்திரமுகி பட காமெடி போல, கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிய நிலையில், தர்பூசணி சாப்பிடலாமா கூடாதா..? என்ற சர்ச்சை, விவசாயிகளை கலக்கமடைய செய்துள்ளது. நிறத்திற்காகவும், சுவைக்காகவும் தர்பூசணியில் ஊசியின் மூலம் இரசாயணம் செலுத்தப்படுவதாக தகவல் வெளியான நிலையில் தர்பூசணியின் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளதால் விவசாயிகள் வேதைனையில் ஆழ்ந்துள்ளனர்.

கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா.. 2 மாநில மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆலோசனை!

கேரள மாநிலம் தேக்கடியில், கண்ணகிகோவில் சித்திரை முழு நிலவு விழாவிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் பங்கேற்றனர்.

டிஜிபி சீமா அகர்வால் உள்ளிட்ட 7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

சென்னை போக்குவரத்துக் கூடுதல் ஆணையர், பொருளாதார குற்றப்பிரிவு, லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனர் உள்ளிட்ட 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மியால், ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுகிறது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தனி நபர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்பமும், சமூகமும் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Parking விவகாரம்: நடிகர் தர்ஷன் நண்பரை கைது செய்த காவல்துறை

நீதிபதி மகனை தாக்கிய விவகாரத்தில் நடிகர் தர்ஷனின் நண்பர் லோகேஷை காவல்துறை அதிரடியாக கைது செய்தது.

சட்டப்பேரவையில் எதிரொலித்த 'எம்புரான்’ பட சர்ச்சை.. ஸ்டாலின் கருத்து

'எம்புரான்' திரைப்படத்தில் சென்சாரில் நீக்கப்படாத காட்சிகள் கடும் எதிர்ப்புக்கு பின் நீக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தீப்பெட்டி தொழில் தோன்றியது சிவகாசியா? ஜப்பானா? சட்டப்பேரவையில் சுவாரஸ்யமிக்க விவாதம்

தீப்பெட்டி தொழில், ஜப்பானில் தோன்றியதா? சிவகாசியில் தோன்றியதா? என்பது குறித்து சட்டப்பேரவையில் விவாதம் ஏற்பட்டது.

தவெக பேனரில் தொடரும் எழுத்துப்பிழை.. விஜய்க்கு புது தலைவலி

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிரான தவெக கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழுத்து பிழையுடன் வைக்கப்பட்டுள்ள பேனர் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஹேப்பி அண்ணாச்சி

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

பாதுகாப்பில்லாத ரயில் பயணம்.. பெண்ணிடம் நகையை பறித்த மர்ம நபர்

ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் இருந்த பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் ஆறு சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விசாரசணை நடத்த காலக்கெடு வேண்டும்.. இபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு

அதிமுக சின்னம், மற்றும் உட்கட்சி விவகாரம் தொடர்பான தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட புகார்களின் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தி முடிப்பதற்கு உரிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்து உள்ளார்.

ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகள்... தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது உயர்நீதிமன்றம்