மத ரீதியாக பிரிக்கலாம் என பாத்தாங்க, தமிழ்நாட்டில் அதுக்கு இடமில்லை, முருகனுடைய வேலை தூக்கிக்கொண்டு சுற்றி வந்து பார்த்தார்கள். அம்மனை சொல்லி பார்த்தார்கள், ஏதாவது சொல்லி பார்த்தார்கள் எதுவும் எடுபடவில்லை
மதுபோதை காரணமாக தகராறு ஏற்பட்டு கொலை நடந்துள்ளதா? அல்லது திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளாரா? வழக்கறிஞராக இருப்பதால் தொழில்முறையில் ஏதேனும் ஏற்பட்ட பிரச்னையில் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முனிரத்னம் குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ரீத்தாபுரம் பேரூராட்சியில் பெண் ஊழியர்களிடம் பேரூராட்சி தலைவர் அத்துமீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, சிசிடிவி ஆதாரங்களுடன் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கவுன்சிலர் அளித்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில், இரவு நேரத்தில், வீட்டிற்கு புறப்பட்ட பெண் ஊழியரின் கைப்பையை வலுக்கட்டாயமாக தலைவர் பறித்து வைத்து கொண்டு அலக்கழிக்கும் சிசிடிவி காட்சி பதிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்ற நிலையில் அதை வைத்து கிண்டல் செய்த நபர் மீது ஐந்து பேர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான கூலி உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் வரவேற்பு தெரிவித்த நிலையில், இதன் மூலம் 5 லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
காவல்துறைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரை முடித்து வைத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுநீரக மோசடி மூலம் சட்டவிரோத பணப்பரிவர்தனையில் ஈடுபட்ட வழக்கில் மருத்துவர் வி.எம்.கணேசன் அவரின் மனைவி உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய நாட்டின் கடல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மேற்கொள்ளும் சைக்கிள் பேரணி விழிப்புணர்வு இன்று வேதாரண்யம் வந்தடைந்த நிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா, முன்ஜாமின் கேட்டு தொடர்ந்த மனுவை அவசர மனுவாக இன்று மதியம் விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அன்னை இல்லத்தின் முழு உரிமையாளராகியுள்ள நிலையில், சகோதரர் ராம்குமார் தொடர்புடைய நிதி பிரச்னையில் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக நடிகர் பிரபு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சக மனிதர்களின் இழப்பை தம் வீட்டு இழப்பாகக் கருதி துயர் விசாரிக்க வரட்டும் கையில் கேமரா இல்லாமல், இனிவரும் காலங்களில் இச்செயல் முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து ஊடகங்களுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் இவ்வேண்டுகோளை வைக்கிறது.