"நான்கு ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் வளர்ச்சிக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் கேள்விக்குறியாகிவிட்டது" என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார்.
ஐசிஐசிஐ வங்கி அதன் அனைத்து கிளைகளிலும், சேவிங்ஸ் கணக்கிற்கான குறைந்தப்பட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகையினை (மினிமம் பேலன்ஸ்) ரூ.50,000-வரை உயர்த்தியுள்ளது சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உண்டாக்கியுள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ரூ.1-க்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 4ஜி இணைய சேவையுடன் கூடிய ஃப்ரீடம் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
மொபைல், வைஃபை மற்றும் டிடிஎச் (DTH) சேவைகளைப் பயன்படுத்தும் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும், 12 மாதங்களுக்கு பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ (Perplexity Pro) சந்தாவை இலவசமாக பயன்படுத்த வாய்ப்பு வழங்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம்.
இந்தியாவில் புதிதாக திறந்துள்ள டெஸ்லா ஷோரூமில், டெஸ்லா மாடல் Y காருக்கு கிட்டத்தட்ட ரூ.29 லட்சம் வரி விதிக்கப்படுவதாக நெட்டிசன் ஒருவர் சமூக வலைத்தளத்தில் புலம்ப, அந்த பதிவு வைரலாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் தனது முதல் 2 மாடல் மின்சாரக் கார்களுக்கான VinFast நிறுவனம் முன்பதிவைத் தொடங்கியது. VinFastAuto.in என்ற இணையதளத்தில் VF6 மற்றும் VF7 மாடல் கார்களை ரூ.21,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய வரிசெலுத்துபவர்களில் ஒருவராக இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் ரூ.4.5 லட்சம் கோடி பங்களித்துள்ளோம், இது தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு பங்குதாரர்களாக எங்களை வலுப்படுத்துகிறது என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.